'டீம் அமெரிக்கா: வேர்ல்டு போலீஸ்' என்றொரு க்ரூட் ஹ்யூமர்' வகையறா திரைப்படம். முழுக்க, முழுக்க பொம்மலாட்டம் நடத்த பயன்படும் பொம்மைகளை கதாப்பாத்திரங்களாக கொண்டு எடுக்கப்பட்டது. ' சகட்டு மேனிக்கு உலக அரசியலை கலாய்த்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில்உள்ள ஒரு பாடலில் ஒரு வரி வரும் "F*** Michael Bay Movies and Ben Affleck needs acting lessons". அதை பல சமயங்களில் பென் அஃப்லெக் நிருபித்ததுண்டு. மிகச் சரியான உதாரணங்கள் - பேர்ல் ஹார்பர், ஆர்மகெட்டான். ஆனால், அதே சமயம் பென் அஃப்லெக்கிற்கு திரைக்கதையாளர், இயக்குநர் என்ற இரண்டு சிறந்த பரிணாமங்களும் உண்டு. மேட் டேமன், பென் அஃப்லெக் இருவரும் இணைந்து எழுதிய Good Will Hunting திரைக்கதைக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதற்கு பிறகு அஃப்லெக் இயக்கிய 'Gone Baby Gone'ம் ஒரு மிகச் சிறந்த திரைப்படம். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை பென் அஃப்லெக் திரும்ப நிரூபித்திருக்கும் படம் தான் 'The Town'.
அமெரிக்காவின் வரலாற்று சிறப்பு மிக்க பாஸ்டன் நகருக்கு, மற்றொரு பக்கமும் உண்டு. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட வங்கிக் கொள்ளைகள் இந்த நகரில் மட்டும் நடப்பது உண்டு. பொதுவாக அமெரிக்க நகரங்கள் இரு பிரிவாக பிரிந்து கிடக்கும் - அப்டவுன் (Up Town) மற்றும் கெட்டோ (Ghetto). இதில் பாஸ்டனில் உள்ள சார்ல்ஸ்டவுன் இரண்டாம் பிரிவில் சேர்த்தி. அதனால் தான் இவ்விடம் வங்கி கொள்ளையர்களின் புகலிடமாகவும் இருக்கிறது. 'தி டவுனின்' கதை அங்கு இருக்கும் ஒரு வங்கிக் கொள்ளை கும்பலை சுற்றி நிகழ்கிறது.
மெக் க்ரே (Ben Affleck), ஜேம்ஸ் (Jereme Renner) இருவரும் தேர்ந்த வங்கி கொள்ளையர்கள். ஒரு வங்கிக் கொள்ளையின் போது வழக்கத்திற்கு மாறாக அந்த வங்கி மேலாளர் க்ளேரை (Rebecca Hall) உடன் கடத்தி செல்கின்றனர். அவளை விடுவித்தாலும், இறுதியில் கொள்ளையர்கள் வாழும் அதே பகுதியில் க்ளேரும் வசிக்கிறாள். மெக் க்ரே அவளை பின் தொடர்வது போல் சென்றாலும், இறுதியில் க்ளேரிடம் காதல் வயப்படுகிறான். இதற்கிடையில் இவர்களை எப்படியாவது பிடித்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் எப்.பி.ஐ அதிகாரி (Jon Hamm). மெக் க்ரேவின் காதல் என்னவானது, அவர்கள் எப்.பி.ஐயிடம் பிடிபட்டார்களா என்பது தான் மீதிக் கதை.
பொதுவாக வங்கிக் கொள்ளை திரைப்படங்கள் கொஞ்சம் ஆக்ஷன் வகையில் தொகையுறும். இருப்பினும், Heat போன்ற திரைப்படங்கள் சிறிது ட்ராமா கலந்த ஆக்ஷனில் சுவாரசியமூட்டும். தி டவுன் இரண்டாம் வகை. எனக்கு தெரிந்தவரை 'Heat' திரைப்படத்தை பிடிக்காதவர்கள் கூறிய காரணம், திரைப்படத்தின் நீளம். அந்த வகையில் 'டவுன்' 120 நிமிடங்களே ஓடுகிறது. சொல்லப் போனால் 'Heat' திரைப்படத்திற்கு அடுத்து எனக்கு பிடித்த வங்கி கொள்ளை படங்களில் 'டவுனு'ம் ஒன்று.
'தி ஹர்ட் லாக்கர்' படத்தில் நடித்த Jereme Renner திரும்பவும் இந்த படத்தில் தனது மெத்தட் ஆக்டிங்கை அருமையாக வெளிபடுத்தியுள்ளார். மனிதருக்கு இந்த வருடம் ஆஸ்கர் நாமினேசன் கிடைக்கவில்லையென்றால் தான் ஆச்சர்யப்படுவேன். திரைப்படத்தின் இறுதியில் சிறிது வழக்கமான ஃபார்முலா வகையை தூவியது போல் ஒரு தோற்றம்.
இருப்பினும் தி டவுன் - Worth Visiting...
4 comments:
good review
பாஸ்...ஒவ்வொரு காமன்வெல்த் கேம்ஸ் நடக்கும் போதுதான் ஒரு பதிவு போடுவீங்களா.....கீதப்ப்ரியன் உங்கள் தளத்தை குறித்து (தளத்தைன்னு சொல்ல முடியாது உங்களை குறித்து)சிலாகித்து என் ப்லாகில் எழுதியிருந்தார். அப்பயிருந்து எப்போ பதிகள் எழுதுவீங்கன்னு எதிர்ப்பார்த்துகிட்டுயிருந்தேன்..
ஒரே சமயத்தில கனவுகளின் காதலரும் நீங்களும் ஒரே படத்திற்கு விமர்சனம் எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது..
Ben Affleck - பிடிக்காத ஒரு நடிகர்..ஆனா GoodWill Hunting ரொம்ப பிடிக்கும் (Rob வில்லியம்சும் ஒரு காரணம்). பாப்போம்.. படம் எப்படியிருக்குன்னு..
விமர்சனம் நன்றாக உள்ளது. பார்க்க முயற்சிக்கிறேன். பரிந்துரைக்கு நன்றி!
@ சி.பி.செந்தில்குமார், எஸ்.கே
நன்றி.
@ கொழந்த
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. வேலை பளு காரணமா ப்ளாக் பக்கம் வர்றவே முடியலை. முடிந்த வரை பதிவுகள் போட முயற்சி செய்றேன்...
Post a Comment