Wednesday, June 18, 2014

ரீங்காரம்


ஒரு பாடலை காலையில் கேட்டு விட்டு அது இரவு தூங்கப் போகும் வரை உங்கள் மண்டையில் ரீங்காரம் இட்டு கொண்டிருக்கிறதா? You are not alone. இந்த வகையில் நான் மிகவும் மோசம். ஒரு பாடல் பிடித்து விட்டால் அது ரீப்பிட் மோடில் பல முறை ஓடும். அப்படி சமீபத்தில் என் மனதில் + ரீப்பிட்டில் ஓடிக் கொண்டிருக்கும் மூன்று பாடல்களை இங்கு எழுதுகிறேன்.

Kurt Hugo Schneider, Kevin Olusula - "Little Talks"

"Little Talks" பாடலை எழுதி இசையமைத்தது "Of Monsters and Men" என்ற ஐஸ்லாந்து இசைக்குழு. ஆரம்பத்தில் நன்றாக இருந்த பாடல், இங்கிருக்கும் அல்டெர்னேடிவ் எஃப்.எம் ஸ்டேஷன்களின் உபயத்தால் சலித்து போனது.  பல சமயங்களில் இது போன்ற பிரபலமான பாடல்களை மற்ற பேண்டுகள் கவர் செய்யும் போது, அவை ஒரிஜினலை விட சிறப்பாக இருக்கும். மிகச் சிறந்த உதாரணம் Paul McCartney-இன் 'Live and Let die' பாடலை 'Guns N' Roses' கவர் செய்தனர். எனக்கென்னவோ, மெக்கார்டினியின் ஒரிஜினலை விட கன்ஸ் அன் ரோசஸ் வெர்ஷன் தான் மிகவும் பிடித்திருந்தது. அதே போல் தான் இந்த பாடலும். ஒரிஜினலை விட மிகவும் அட்டகாசமாக இருப்பதற்கு காரணம் Kevin Olusula-வின் செல்லோவும், பீட் பாக்ஸ் திறமையும் தான். சமீபத்தில் கோகோ கோலா செய்த உருப்படியான வேலை இதுவாகத்தான் இருக்கும். 




Arctic Monkeys - "Do I wanna know?"

கேமரூன் க்ரோவ் இயக்கிய "Almost Famous" என்றொரு திரைப்படம் இருக்கிறது. அதில் கேமரூன் தான் 'ரோலிங்க் ஸ்டோன்ஸ்' இசை இதழின் நிருபராக இருந்த அனுபவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து எடுத்திருப்பார். ஒவ்வொரு க்ளாசிக் ராக் இசை ரசிகரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அதில் பாப் இசையை பற்றி ஒரு அருமையான வசனம் வரும். 

"Most of the time, the best stuff is the popular stuff. It's much safer to say popularity sucks, because that allows you to forgive yourself if you suck."

இதே போல் தான் ஆர்டிக் மன்க்கீஸ் என்றொரு பேண்ட் இருந்தது என்று எனக்கு தெரியும். அவர்களும் ஆறு வருடமாக பாடல்கள் வெளியிட்டு கொண்டிருந்தாலும், அவர்களின் சமீபத்திய ஆல்பமான 'AM' தான் முதன் முதலில் Billboard Hot 100-க்குள் வந்தது. ராக் ரசிகர்கள் 'Arctic Monkeys become a sellout" என்று கத்தினாலும் என்னை பொறுத்த மட்டில் அவர்களின் மிகச் சிறந்த ஆல்பம் இது. அதிலும் 'Do I wanna know' என்னுடைய ரீப்பிட் லிஸ்டில் சேர்ந்து விட்டது. பாடல் வரிகள் - Getting over your ex. 



Kongos - "Come with me now"

அக்கார்டியன் இந்திய சினிமா பாடல்களில் 60களிலும், 70களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. அதிலிருந்து வரும் ஒரு வகையான mellow-வான இசைக்காக ஆர்.டி.பர்மனிலிருந்து, எம்.எஸ்.வி வரை எல்லோரும் உபயோகித்தனர். அக்கார்டியனை நன்றாக உபயோகித்த பாடல், 'ஆராதனா'வில் வரும் 'மேரே சப்னோ கி ராணி'. ரோலிங்க் ஸ்டோன்ஸின் 'Backstreet Girl', ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீனின் '4th of July' போன்ற பாடல்கள் அக்கார்டியனின் இசையால் தான் ஹிட்டானது. இன்று வழக்கொழிந்து போன அதன் இசை, சமீபத்தில் 'ராஜா, ராணி' படத்தில் வந்த 'சில்லென ஒரு மழைத்துளி' பாடலின் ஆரம்பத்தில் எட்டி பார்த்தது.  இன்றைய பாப், அல்டெர்னேட்டிவ் எதிலுமே நீங்கள் அக்கார்டியனை கேட்பது கடினம்.

ஆனால், இன்றோ வட அமெரிக்காவில் உள்ள இசைக்கருவி கடைகளில் அக்கார்டியன் விற்பனை கொடிகட்டி பறப்பதற்கு காரணம்  'காங்கோஸி'ன் 'Come with me now' பாடல். ஜானி, ஜெஸ்ஸி, டைலன் மற்றும் டேனியல் காங்கோஸ் என்ற நான்கு தென் ஆப்ரிக்க சகோதரர்கள் சேர்ந்தமைத்தது தான் இந்த இசைக்குழு. இதை எழுதும் போதும் ரீப்பிட்டில் இந்த பாடல் பிண்ணனியில் ஒலித்து கொண்டிருக்கிறது. பாடல் வரிகள் - ராக் பாடல்களுக்கான க்ளிஷேவான சாத்தானுடன் செய்யும் ஒப்பந்தம் பற்றியே பேசுகிறது.  அந்த வித்தியாசமான கீபோர்டு சேர்ந்திசை, நான்கு சகோதரர்களின் எனர்ஜடிக் குரல் எல்லாமும் சேர்ந்து ஒலிக்கையில் அதற்குள் பாடல் முடிந்துவிட்டதா என்றே தோன்றும்.  ஒரு 10 தடவை இந்த பாடலை ரீப்பிட்டில் ஓட விட்டதால், பூரிக்கட்டையில் இருந்து சற்றே, மிகவும் சற்றே என் தலை தப்பியது. 


Share