![]() |
© மாமல்லன் கார்த்தி |
உங்கள் கவனத்திற்கு (அ) எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பல முரண்கள் உங்களுக்குத் தோன்றலாம்.
பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது தான் ‘அலைபாயுதே’ வந்தது. எங்க ஊர்ல மணிரத்னம் படத்திற்கு அத்தனை பெரிய ஓபனிங் இல்லாததால ‘அப்பு’னு ஒரு மகா,மெகா காவியம் பொட்டிய கட்டுனதுக்கப்புறம் செகண்ட் ரீலிசா வந்தது. இதற்கு காரணம் இதற்கு முன் வெளியான ‘இருவர்’ மற்றும் ‘உயிரே’. எங்கள் ஊரில் முதல் நாள் முதல் ஷோவிற்கு மொத்தம் 10 பேர் தான் இருந்தார்களாம். அதனால ரிஸ்க் எடுக்க விரும்பாத தியேட்டர்காரர்கள் அதற்கப்புறம் மணிரத்னம் படம் என்றால் செகண்ட் ரிலீஸ் தான் செய்தார்கள். ‘ஆய்த எழுத்து’ வரை அது தொடர்ந்தது. ’குரு’ தப்பிதமாய் முதல் ரிலீஸ் செய்யபட்டு சுமாராக ஓடியது. உண்மையை சொல்லப் போனால் ’அலைபாயுதே’ அப்போது எனக்கு மிகவும் பிடித்த படமாகிப் போனது. படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து நண்பன் ஒருவன் ஒரிஜினல் வி.சி.டி கொடுக்க, அது தேயும் அளவு திரும்ப திரும்ப பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில்லை.
இப்படி இருக்க மணிரத்னத்தின் அனைத்து படங்களையும் கல்லூரி வந்த பின் பார்க்க ஆரம்பித்தேன். அவருடைய படைப்புகளில் கூறப்படுவனவை உண்மையை போல் தோற்றம் அளித்தாலும், ஒரு வித குறுகிய மனப்போங்குடன் படைக்க பட்ட படைப்புகளாகவே தோன்றியது. முக்கியமாய் அவருடைய படங்கள் நெடுகிலும் ஒரு வெறுமை தோன்றியது. அந்த வெறுமை ஓட்டைகள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பிண்ணனி இசை ஆகியவற்றால் பூசி மொழுகப் படுவதும் தெளிவுறக் கண்டேன். இதனால் தான் மணிரத்னம் தன் படங்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்துகிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.
இன்ஸ்பிரேஷன் - இந்த ஒரு வார்த்தையை வைத்து நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிதாமகர் மணிரத்னம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 1996 இந்தியா டுடே இலக்கிய மலரில், கமலிடம் ‘நாயகனில்’ உள்ள ‘பாதிப்புகள்’ பற்றி வாசந்தி அவர்கள் கேட்ட போது “அது Mario Puzo வை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சி” என்றார். பின்னர் ஏன் மார்லன் பிராண்டோவின் உடல்மொழி அப்படியே பயன்படுத்தபட்டது?
இன்ஸ்பிரேஷனுக்கும், ப்ளேகரிசத்திற்கும் (Plagiarism - அப்பட்டமாய் காப்பி அடிப்பது) இடையே ஒரு சிறிய, மிகச் சிறிய இடைவெளி உள்ளது. மணிரத்னம் இன்ஸ்பிரேஷன் என்ற இடைவெளியை தாண்டி, ப்ளேகரிச வெளிக்குள் நுழைந்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. இதை நான் வெளிப்படையாக கூறினால் என்னை சுற்றும் விமர்சன கணைகள் கூராக பாய்கிறது. ‘நாயகன்’ காட்ஃபாதரின் வெளிப்படையான பாதிப்பு என்று சாதாரணமாக ஆங்கில படம் பார்ப்பவர் கூட சொல்லி விடுவர். அதில் இடம்பெறும் ‘Once upon a time in America' காட்சிகள் பட்டியலில் வராது. இருப்பினும், இந்த படம் ‘டைம்’ இதழின் சென்ற நூற்றாண்டின் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பிடித்ததால் விதிவிலக்கு. மேலும் ‘காட்ஃபாதரால்’ பாதிக்கபட்டு எடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் கணக்கில் அடங்கா. ஏன் ‘சர்க்கார்’ கூட காட்ஃபாதரின் தழுவல் தானே? ஆனால் அதை தழுவல் என்று வெளிப்படையாக டைட்டில் கார்டில் போடுமளவிற்கு ராம் கோபால் வர்மாவிற்கு தைரியம் இருந்தது. மணிரத்னத்திற்கு?? காட்ஃபாதர் ஹேங் ஓவர் ‘அக்னி நட்சத்திரத்திலும்’ தொடர்ந்தது.
’மெளன ராகமும்’ அதற்கு முந்தைய மணிரத்னம் திரைப்படங்களும் ஒரு வித அழகியல் தன்மையோடு தோன்றின. ஆனால் ‘இதயகோயில்’ எண்பதுகளின் மத்தியில் வந்த ட்ராஜெடி ‘காவியங்கள்’ வரிசையில் இருப்பதால் எனக்கு பிடிக்காமல் போனது. முக்கியமாய் அவரின் முதல் படமான ‘பல்லவி அனு பல்லவி’யை பார்த்த போது சற்று பிரமிப்பாகத் தான் இருந்தது. ஒரு வேளை அதற்கு காரணம் பாலுமகேந்திராவின் ஓளிப்பதிவா? பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் இது வரை தன்னை கதை சொல்லி அசத்தியவர்களில் ஒருவர் மணிரத்னம், மற்றொருவர் ‘கற்றது தமிழ்’ ராம் என்று தெரிவித்து உள்ளார். அத்தகையதொரு படைப்பாளி ‘தேசிய கவனம்’ பெறுவதற்காக சோடை போனாரோ என்றும் தோன்றுகிறது.
மணிரத்னம் ’தளபதி’யில் புராண கதை ஃபார்முலா எடுபட்டவுடன், தேசிய அளவில் எடுத்துச் செல்ல சத்யவான், சாவித்ரி கதையை ‘ரோஜா’ என்று படைத்தார். இந்த படத்தின் அரசியலை, தமிழ் இலக்கிய விமர்சகர்கள் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டதால் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. 'பம்பாய்’ ஒரு வித மொன்னையான படைப்பு என்றே கூற வேண்டும். காரணம் அந்த படம் என்ன சொல்ல வந்ததோ அது மிக வெளிப்படையாக சொல்லப்படவில்லை. அன்றைய அரசியல் சுழலும் காரணமாக இருந்திருக்கலாம். அந்த மொன்னைத்தனம் ’இருவரி’லும் தொடர்ந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கும் இருவரை நேரடியாக திரைபாத்திரங்களாக படைத்தால் ட்ரவுசர் கிழிந்து விடுமே. அது தான் நடந்தது. பொதுவாக மணிரத்னம் திரைப்படங்கள் ‘ஏ’ செண்டர் ஆடியன்ஸ் எனும் பெருநகர மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று ஒரு வித மொக்கையான மேம்போக்கு நிலவி வருகிறது. அது ‘இருவரி’ல் பொய்த்தது என்றே கூற வேண்டும். என் சினீயர் ஒருவர் தெரிவித்த வரையில் இந்த படம் ஓடுவதற்கு ‘ஹிந்து’வில் மாய்ந்து, மாய்ந்து இந்த படத்தை பற்றி தலையங்கம் எழுதினார்களாம். அப்படியும் படம் சென்னையிலேயே, ஊஹீம்...
ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டிய சூழலில் வெளியான ’அலைபாயுதே’, ஆர்.செல்வராஜின் கதையிலும், சுஜாதாவின் வசனத்திலும் தப்பி பிழைத்தது என்றே சொல்ல வேண்டும். ‘மெளன ராகம்’ மணி திரும்பி விட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் ’அரசியல் சினிமா’ ஆசை அவரை விடவில்லை போலும். ஈழப்பிரச்சனையை வைத்து ‘கன்னத்தில் முத்தமிட்டாலை’ எடுத்தார். நாடகத்தனமான ஈழத்தமிழில் பேசிய கதாபாத்திரங்கள் ஒன்று கூட ஈழத்து மனிதர்களாக தோன்றவில்லை. இதை பல ஈழ எழுத்தாளர்களும், நண்பர்களும் எழுதி தள்ளி விட்டனர்.
‘ஆய்த எழுத்து’ மணிரத்னத்தின் அரசியல் சினிமாக்களின் உச்சம் என்று கூறலாம். இந்த படம் திருச்சியில் போட்ட போது முதல் காட்சிக்கு 50 பேர் கூட தேறலை. (நானும் முதல் ஷோவிற்கு போயிருந்தேங்க... :D) உலகெங்கிலும் உள்ள திரைப்பட கல்லூரிகளில் ‘ரோஷாமான் ஸ்கிரீன்ப்ளே எஃபக்ட்’ என்று பாடமாகவே வைக்கபட்டுள்ளது. அந்த எஃபக்ட் மணிரத்னத்தை பாதித்தது. இருப்பினும் அது கூட ஏற்று கொள்ளக்கூடிய ஒன்று. அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘Amorres Perros' படத்தில் இடம்பெறும் காட்சிகள் அப்படியே காமிரா கோணம் மாறாது கையாளப் பட்டன. படத்தின் காட்சிகள் துண்டு, துண்டாக இருக்கும் போது ரசிக்கக் கூடியதாய் இருந்தாலும், மொத்தமாக காணும் போது பார்வையாளன் குழப்ப நிலைக்கு ஆளானது தான் படத்தின் தோல்விக்கு காரணம்.
‘குரு’ - ’ஏவியேட்டரின்’ சர்க்கரை தடவி எடுக்கப்பட்ட (அ) ‘ஏவியேட்டரின்’ ரீமேக் ரைட்ஸ் வாங்கப்படாத இந்திய படைப்பு. இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம். இப்புடியே இன்ஸ்பையர் ஆகிட்டே போனீங்கன்னா உங்களோட ஒரிஜினல் படைப்பு எப்ப வரும்ங்க. இன்னொரு கருத்தும் இருக்குது: இன்ஸ்பையர் ஆகுறது தப்பு இல்லை, அப்பிடி இன்ஸ்பையர் ஆனாலும் அந்த இறுதி படைப்பு படைப்பாளியோட பாணியில் இருந்தால் தப்பில்லையாம். நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதும் போது, அதன் மூலத்தை குறிப்பிடாமல் எழுதினால் என் மென்னியை திருகிவிடுவார்கள் அறிவியலாளர்கள். ‘பூ’ திரைப்பட டைட்டில் கார்டில் ‘நன்றி: ஷாங்க் ஈமு’ என்று வரும். காரணம்: ‘பூ’ படத்தின் பெரும்பாலான கூறுகள் ஷாங்க் ஈமுவின் ‘தி ரோட் ஹோம்’ கதையை தழுவியது. இது போன்ற குறைந்தபட்ச நேர்மையாவது மணிரத்னத்திடம் உள்ளதா?
இந்த இடத்தில் தான் மணிரத்னம் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு மோசமான முன் உதாரணமாகிறார். ஃபிலிம் இன்ஸ்டியூட்டிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் ஒரு ஒலகப்பட டி.வி.டியை சுட்டு ஒரு திரைக்கதை தயாரித்து ஒரு படமும் எடுத்து விடுவான். யாரேனும் ‘இது அந்த படத்தின் காப்பி தானே’ என்று கேட்டால் ‘மணிரத்னம் அடிக்கிறாரு, நான் அடிச்சா மட்டும் தப்பா’ என்று எதிர் கேள்வி தொடுப்பான். நம்முடைய பெரும்பாலான வெகுஜன அறிவுஜீவி விமர்சகர்கள், மணிரத்னத்தின் திரைப்படம் தழுவல் எனத் தெரிந்தாலும் ‘ஆஹா, ஒஹோவென’ புகழ்வார்கள். அதே வேறொருவர் காப்பி அடித்தால் போட்டு தாளித்தெடுப்பார்கள்.
நல்ல வேளை. மணிரத்ன தலைமுறை அவரோடு நின்றுவிட்டது. அவரின் மாணவர்கள் அழகம்பெருமாள், சுசி.கணேசன், ப்ரியா.வி ஏதோ ரெண்டு படங்கள் செய்து இருந்தாலும் ஒன்றும் பெரிசாக பெயர் சொல்லிக் கொள்ளும் படியாக சாதிக்கவில்லை. இருந்தாலும் இந்த கவுதம் மேனன், செல்வராகவன் வகையறாக்கள் மணிரத்ன வாரிசு என்ற பட்டத்திற்கு அடியை போடுவது தான் மேலும் கடுப்பேற்றுகிறது.
64 comments:
இந்த நபர் (மணிரத்னம்) பிரமணராக இல்லாவிட்டால்... ஆள் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார், பிரமாணக்கூட்டம் அவாள தூக்கிபிடிக்கிறதுல தப்பில்லியே.. நம் வாழ்க்கையின் ஒரு நெருக்கடியோ, பரிதவிப்போ.. அடையாளங்களோ...இந்த ஆள் படத்துல இருந்துதுனு சொல்லுங்க மேற்கண்ட வாசகத்த திரும்ப பெற்றுக்கொள்கிறேன்..
நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதும் போது,//
நண்பா சீரியஸான கட்டுரைக்கு நடுவில் நகைச்சுவையை புகுத்தும் உங்களின் தேர்ந்த எழுத்து நடை அபாரம்.
மணிரத்னம் அவர்களின் வார்த்தையில் சொன்னால் 'Direction is like management' . மணிரத்னம் ஒரு தேர்ந்த நிர்வாகி-வியாபாரி, சினிமா ஊடகம் சார்ந்த அழகியலை, தான் கண்டு ரசித்த உலகப் படங்களின் நுட்பங்களை, தான் இயங்குகிற தளத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் புலமை உடையவர். அந்த வகையில் அவர் ஒரு 'skilled filmmaker... See More' என்று சொல்லலாம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இன்னும் popular cinema'வில் முன்னிலையில் உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வகையில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மேலும், அவர் ஒரு தெளிவோடு இயங்கி வருகிறார், அவருக்கு எது கலை -எது வியாபாரம், -தான் எங்கு இருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இயக்குனர் சேரனை போன்று 'தென்னகத்தின் சத்யஜித் ரே' என்று போஸ்டர் ஒட்டும் காரியங்களில் என்றுமே அவர் ஈடுபட்டதில்லை. அதே போல் அவர் எங்கிருந்து சுடுகிறார் என்ற கேள்விக்கும் சரியான பதில் அளிப்பதில்லை. அதை தாண்டி அவர் சுடும் படங்களுக்கு அவர் பெரும்பாலும் நியாயம் செய்வதில்லை. நம் நாட்டில் லஞ்சம் வாங்குவது சகஜம் தானே! அதையெல்லாம் யாரவது சொல்லிக் கொண்டா இருகிறார்கள்? it has become legitimate.
Tarantino'வை எடுத்துக்கொண்டால், அவன் தனக்குப் பிடித்த எல்லாவற்றிலிருந்தும் சுடுகிறான், அது ஒரு தந்தையிடம் மகன் எடுத்துக்கொள்ளும் உரிமையை போன்றது. அந்த உயிர்ப்போடு அது இருக்கிறது, அது தன் ரசிபபுக்குளிருந்து தனிச்சையாக மலர்வது, அது சிருஷ்டி. அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை. No corruption.
நாளைய இயக்குனர்கள் மணிரத்தினம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது 'தன் சினிமாவை எப்படி வியாபாரரீதியாக (marketing strategies) செயல்முறை படுத்துவது என்பது தான், மற்றபடி சினிமாவை எப்படி எடுப்பது என்பது அல்ல! (அதற்கு அவர் உதவியாளர்களே உதாரணம் )
P.S: நீங்கள் பயன்படுத்தி இருக்கும் புகைப்படம் நான் டிசைன் செய்தது. copyright என்று வரவேண்டும், 'உதவி' என்று அல்ல. முடிந்தால் திருத்தம் செய்யவும். :)
// 'பம்பாய்’ ஒரு வித மொன்னையான படைப்பு என்றே கூற வேண்டும். காரணம் அந்த படம் என்ன சொல்ல வந்ததோ அது மிக வெளிப்படையாக சொல்லப்படவில்லை. அன்றைய அரசியல் சுழலும் காரணமாக இருந்திருக்கலாம். அந்த மொன்னைத்தனம் ’இருவரி’லும் தொடர்ந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கும் இருவரை நேரடியாக திரைபாத்திரங்களாக படைத்தால் ட்ரவுசர் கிழிந்து விடுமே.//
இது மணியின் தவறா? இப்படிப்பட்ட சூழல் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டியவர் அவர் அல்ல..
i agree karthi's comments
//‘நாயகன்’ காட்ஃபாதரின் வெளிப்படையான பாதிப்பு//
அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து.. மேலும் காட்ஃபாதரின் பாதிப்பில்லாமல் தாதா படம் எடுக்கவியலாது என்று எங்கோ படித்ததாக ஞாபகம்..
இப்போ என்ன உங்க பிரச்சனை? ஒரு சாதாரண சினிமாவுக்கு இவ்ளோ அக்கபோரா? ஓட்டுக்கு த்துட்டு வாங்கிறதே தப்பு இல்லன்னு ஆகிப்போச்சு...மணி ரத்னம் மாபெரும் டிரெக்டர் ன்னு உலகமே சொல்லுது....நீங்க சொல்ற மாதிரி டைட்டில் ல தேங்க்ஸ் ன்னு ஒன்னு போடலாம்...அவ்ளோ தான் மத்தபடி பெருங்குத்தம் ஒன்னும் இல்ல...
எது எதுக்குத் தான் சாதிய சொல்லனும்ன்னு ஒரு விவஸ்த இல்லையா? என்ன உலகமடா? உடனே நானும் பிராமின்னு நினைக்க வேண்டாம்...நான் BC ...
அப்புறம் ஆய்த எழுத்து கலையரங்கம் ல தான ரிலீஸ் ஆச்சு...நானும் பார்த்தேனே i think house full ..செம சவுண்ட்..பாதி டயலாக் புரியாம ரெண்டாவது வாட்டி போனோம்...
எத்தனைபேருக்குத் தெரியும், மணிரத்னத்தின் முந்தய படங்கள் இன்னும் பல திரைப்பட விழாக்களை வலம் வந்து கொண்டிருப்பது? , அவர் சர்வதேச அளவில் தன் கல்லாவை ரொப்பிக் கொண்டிருகிறார். மிக அமைதியாக..
நம்மாட்கள் என்னவென்றால் தங்களை தாங்களே மெச்சிக்கொண்டு பேட்டி அளிக்கிறார்கள், நாங்கள் அதை செய்துவிட்டோம், இதை கிழித்துவிட்டோம், உலக தரத்திற்கு முன்னேறிவிட்டோம்...
@ ராஜா
மணிரத்னத்தின் பிராமண அரசியலுக்கு உள்ளேயே நான் போக விரும்பலை. அதை தாண்டிய மொன்னைகளைத் தான் நான் குறிப்பிட்டு உள்ளேன்...
@ ப்ரகாஷ்
என்ன ஒரு வில்லத்தனம். என்னோட ரிசர்ச் ஆர்ட்டிகல் மட்டும் பப்ளிஷ் ஆகட்டும். அப்ப உன்ன கவனிச்சிக்குறேன்...
@ கார்த்தி
மாற்றிவிட்டேன். நான் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். ஜம்னாலால் பஜாஜ் நிர்வாகவியல் மையத்தில் தான் படித்த மேலாண்மையியலை தன் படங்களில் நன்றாகவே உபயோகபடுத்துகிறார் மணி. அவர் ஒரு அருமையான சினிமா வியாபாரி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இருப்பினும் அறிவுஜீவிக்கள் அவரை ‘பெரிய இயக்குநர்’ என்று தூக்கி பிடிப்பது தான் என் கடுப்பிற்கு காரணம்.
@ பிரசன்னா
தன் படைப்புகளுக்கு ஒரு பெரிய வியாபார வெளி வேண்டும் என்பதற்காகத் தான் அவர் தேசிய அளவிற்கு சென்றார். பாலிவுட்டில் எதையும் ஏற்று கொள்ளும் மனபக்குவம் இருக்கிறது. ஊரறிந்த ரகசியத்தை அப்படியே படமாக்க வேண்டியது தானே. அப்படியிருக்க அதை திரித்து வேறு மாதிரி படம் எடுப்பது எதற்கு? உண்மையை சொல்லப் போனால் ‘இருவர்’ வந்த புதிதில் இப்படி திரித்து எடுத்ததற்கு எல்லா வெகுஜன மீடியாக்களும், இலக்கிய ஊடகங்களும் சாடின. உடன்பிறப்புகளும், இரத்தத்தின் இரத்தங்களும் கண்டு கொள்ளக் கூட இல்லை.
//
அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து.. மேலும் காட்ஃபாதரின் பாதிப்பில்லாமல் தாதா படம் எடுக்கவியலாது என்று எங்கோ படித்ததாக ஞாபகம்..
//
உங்கள் கருத்தில் நீங்களே முரண்படுகிறீர்களே. இன்னொரு முறை நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள்...
உங்கள் பட்டியலில் அஞ்சலி யை விட்டுவிட்டீர்கள். அஞ்சலி படம், ஸ்பீல்பர்க் அவர்களின் E.T. படத்தின் தழுவலன்றி வேறில்லை.(உண்மயில், E.T. யின் கதை சத்யஜித் ரே அவர்களுடயது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
@ பருப்பு
உங்களைச் சொல்லி குத்தமில்லைங்க. நம்ம அரசியல்வாதிகள் அப்பிடி நம்ம சிந்திக்கும் திறனை இப்பிடித் தான் மழுங்க வைச்சிருக்காங்க.
’வெறும்’ சினிமான்னு நீங்க சாதாரணமா சொல்றீங்க. சினிமாவை கொஞ்சம் ‘சீரியசா’ பாக்குறவங்களில் நானும் ஒருத்தன்.
அது போக எனக்கு தெரிஞ்சு ‘கலையரங்கம்’ ஹவுஸ்ஃபுல் ஆனது ‘சந்திரமுகி’க்குன்னு அங்க வேலை செய்றவரே சொல்லி இருக்காரு. நான் தான் முதல் டிக்கெட்டு வாங்குனேன்னா பார்த்துக்கங்களேன். மத்தப்படி ஹவுஸ்ஃபுல்னு காமெடி பண்ணாதீங்க...
@ அழகன்
‘அஞ்சலி’யில் வந்த பாடல் மட்டும் தான் ஈ.டியின் தழுவல் என்று நினைக்கிறேன். மற்றபடி மனப்பிறழ்வு உள்ள குழந்தையின் உளவியல் சிக்கல்களை தெளிவாக கூறி இருப்பார்...
@ பருப்பு
சாதியை பத்தி நான் சொல்லவே இல்லைங்க. நீங்க பி.சியா, பிராமின்னானு நான் கேட்டேனா??
//உங்கள் கருத்தில் நீங்களே முரண்படுகிறீர்களே//
இல்லை இல்லை..
அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை - இது கதைக்காக..
காட்ஃபாதரின் பாதிப்பில்லாமல் தாதா படம் எடுக்கவியலாது - இது காட்சி அமைப்பிற்காக சொன்னது..
//பாலிவுட்டில் எதையும் ஏற்று கொள்ளும் மனபக்குவம் இருக்கிறது.//
நிச்சயம் கிடையாது.. மில்க் தாக்கரே இருக்கும் ஊரில் இது எல்லாம் சாத்தியமா..?
அச்சச்சோ.. நடுவுல ஒரு சீரியஸ் சண்டை ஓடிட்டு இருக்கு போலயே :)
@ பிரசன்னா
விடுங்க சார். அந்த ஆளோட பதிவுல ரெண்டு பின்னூட்டம் போட்டேன். அதுக்கு வந்து கத்திட்டு போவுது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
உங்கள் நேர்மை பிடித்திருக்கு..........................ரொம்ப கவலையாக உள்ளது...எங்க இருந்து தான் இந்த ஜாதினு ஒன்னு வந்துச்சோ தெரியவில்ல.ஜாதி எல்லாம் தூக்கி வீசி விட்டு வாங்க புதுசா வாழ்வோம்.
Nice write-up Prasanna.Yet,I have the feeling that you could have gone deeper by covering more aspects of Manirathanam's films. Mani is getting undue recognition and is undeservedly portrayed as the face of contemporary Indian Cinema in world forums.We need to expose his fallacies as a film maker because it can be sort of honoring our film making legends of past and present who lurch in oblivion.
Long ago I heard that Mani is a non-brahmin? Is he brahmin or the other way around?
@ prasanna,
அறிவுஜீவிகள் அவரை முக்கியத்துவப் படுத்துகிறார்கள் என்றே நினைக்கிறேன். (He has a body work to be critically appreciated. )அவரை தூக்கிப் பிடிப்பவர்களை பொருட்படுத்த தேவையில்லை, அது ஒரு அனாவசியமான பிரமிப்பிற்கு கொண்டு செல்லும்,
என் புகைப்படத்தை நல்லதொரு பதிவிற்கு பயன் படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி.
@ Sri
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நானே சாதிய அரசியல் பக்கம் போகவில்லையென்றாலும், என்னை இழுத்து விடுகிறார்கள். என்ன செய்வது?
@ Asadha
Thanks for your comments. I really don't know he is a brahmin or non-brahmin. I didn't care about that at all. Focus is only on his movies, not his personal life or personal views. Yeah its true. I could've gone deeper. But if you go further deeper and deconstruct, I might start loving his movies. Initially the love to his movies, made me to hate his movies.
@ கார்த்தி
மிக்க நன்றி... :)
மத்தப்படி ஹவுஸ்ஃபுல்னு காமெடி பண்ணாதீங்க...
//////////////////////////
அட என்ன பாஸ் இப்டி பொசுக்குன்னு கேவலப்படுத்துறீங்க!
உங்களுக்கு வந்த முதல் கம்மேன்ட்டே இந்த சாதியப் பத்தி தான்..நானும் நெறய பதிவர்களைப் பாத்துட்டேன் ஏனோ ஜாதி வெறி தல தூக்கி இருக்கு பதிவுலகத்தில..அதான் சொன்னேன்...
பிரசன்னா ஒரு பொய்ய... திரும்ப திரும்ப சொன்னா மெய்யாகிடாது.. கலையரங்கம் முதல் காட்சி அரங்கம் நிரம்பி இருந்தது.. நானும் அங்குதான் பார்த்தேன்.. டிக்கெட் எடுத்து கொடுத்தவர் நீ..நான்..நிலா.. ஹீரோ.. பரதன். அவர் பெரிய திரைப்பட விநியோகஸ்தர்.. வேண்டுமானால் விசாரித்துக்கொள்ளுங்கள்.
வாய்யா ராஜா!...ஹலோ பிரசன்னா, என்னமோ கலையரங்கம் ஓனர் மாறி பேசுனீங்க...ஒரு வேல செகண்ட் ரிலீஸ் ஒபெநிங் ஷோ போனீங்களோ!
ஜாதி வெறி கமென்டை திரும்ப பெறுகிறேன்... THE HINDU பத்திரிகையின் பேரை திரும்ப பெற்றுக்கொள்ளச்சொல்லுங்கள்.. முதன்முதலில் ஜாதிக்காக சங்கம் யாரென்று.. உங்கள் எவருக்காகவாவது தெரியாது.. தாம்பிராஸ் எனும் பிரமாணச்சங்கம்.. 150 ஆண்டுகள் தாண்டியது.. ஹிண்டு மற்றும் தினமலர் பத்திரிகைகளின் ராவணன் விமர்சனம் பின்பு.. என் ஜாதி அடையாள பேச்சுக்கு பதில் சொல்ல வாருங்கள்.
பருப்பு நீங்க அரைவேக்காட பேசாதீங்க... முதல்ல விசாரிங்க.. அப்புறம் பேசுவோம்.
என்னய்யா நடக்குது இங்க?எல்லாருமே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறீங்க...
good post which has taken off the mask of the india's leading film(plagiarist)director. when armurugadoss was inspired from memento for ghajini, everyone in tamil cinema accused him for his inspiration. even though he took the idea and certain scenes from original version, every cinema critics here including suhasini MR's wife indirectly commented him as plagiarist.good job friend keep post more about cinema.........
@ ராஜா
நான் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து சென்றேன். அதுவே அப்ப 50 ரூபாய். எனக்கு முன்னால் ஒரு 10 வரிசைகள் முழுவதும் காலியாக இருந்தது. அதுக்கு பேரு ஹவுஸ்ஃபுல்லா. சொல்லப் போனால் முன் சீட் மேல் கால் போடாதீர்கள்னு ஸ்லைட் போட்டப்புறம் என் நண்பன் முன் சீட்டில் கால் போட்டு படம் பார்த்தான்.
@ பருப்பு
நான் யாரையும் மூஞ்சில அடிச்சா மாதிரி பேசலை. அது ராஜாவோட கருத்து.
@ ராஜா
உங்களின் கருத்து உங்களோடு. ஆனால் நான் பிராமண அரசியலை பற்றி பேசவில்லையே.
@ S R I
Thank you for your comment...
இல்லை, பாடல் மட்டுமல்ல. அஞ்சலி படத்தின் கதையை சற்று E.T. யுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வெற்றுக் கிரக வாசிக்குப் பதில் மானவளர்ச்சி குன்றிய குழந்தை, அவ்வளவுதான். அதாவது. E.T. கதையை simplify செய்திருக்கிறார்.
@ அழகன்
ஹ்ம்ம். நீங்கள் என்னை விட ஆழமாக அலசுகிறீர்கள்.
நீங்கள் சொன்னது நூறுக்கு நூறு உண்மை பிரசன்னா! இவரின் படங்களின் வெற்றிக்குப் பின்னாலும், அதன் தரத்திற்கும் இளையராஜாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது! நான் இதை சொல்வதில் எந்த உள்குத்தும் கிடையாது. அப்பட்டமான உண்மை! 'பகல் நிலவை' பாடலுக்காகவும், ஒளிப்பதிவுக்காகவும் கல்லூரியை கட் செய்துவிட்டு பலமுறைப் பார்த்திருக்கிறோம்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி M.S.E.R.K
all my comments are just fun... like all other blogs i wrote here..
This is your blog, you can post your views and whatever you like....I agree!!! Reg. Your blog comments, some thing different from other blogs comments...
Thanks for everything!!!
Cheers!
I agreed 100%.
I agreed 100%
பிரசன்னா,
முழுக்க உடன்படுகிறேன்.இந்தியாவில் தலைசிறந்த இயக்குனர் பட்டியலில் பான் நலின் என்று ஒருவர் இருக்கிறார்.சத்தமில்லாமல் சாதிக்கிறார்.
என்ன அவர் படம் இந்தியாவில் ஓடாது,இதில் நீங்க சாதிய பத்தி எங்கேயும் சொல்லலியே?பின்னூட்டத்தில் என்ன குழப்பம் நண்பா,
பாட்டு எழுதி பேர் வாங்கினவங்க பலர்.. பிழை கண்டுபிடிச்சு பேர் வாங்கறவர் பலர்.. நீங்க எந்த ரகம்னு உங்களுக்கே தெரியும். இந்த மாதிரி சென்செஷனளாக எழுதி பிரபலம் ஆகும் நீங்கள் ஏன் மற்ற ப்லாக்கர்களுக்கு ஒரு மோசமான் முன் உதாரணம் என்று வேறு ஒருவர் ஒரு பதிவு எழுதுவார் நீங்கள் மணி ரத்னத்தின் நூறில ஒரு பங்கு பிரபலம் ஆனால்.
@ A P Saravanan
Thank you.
@ கார்த்திகேயன்
நான் ஒன்னும் சொல்லலைங்க. சொல்லாம இருக்கறப்பயே என்னை வம்புக்கு இழுக்குறாங்க.
@ Tamil boy
பிழை கண்டுபிடிச்சு பேர் வாங்கனும்னு அவசியம் எனக்கில்லைங்க. Iconoclast அல்லது Idol breaker என்ற பதத்தை கேள்வி பட்டிருப்பீங்க. அதைத் தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். அப்படியே நான் புகழ் அடைஞ்சாலும் என்னை விமர்சித்து எழுத ஆளும் கிடைச்சாச்சு போல இருக்கு. மேலே வருண்’னு ஒரு போஸ்டர் பொன்னுச்சாமி பின்னூட்டத்தில் ஆத்து ஆத்துனு, சொற்பொழிவு ஆத்தியிருக்கார். பாத்தீங்களா??
@ கார்த்திகேயன்
பான் நளினின் ‘சம்சாரா’வை 2007-இல் சென்னையில் ஒரு ஆறு மாதம் வேலை பார்த்து கொண்டிருந்த போது பார்த்தேன். சத்யம் 6 டிக்ரிஸில் தான் பார்த்தேன். உண்மையை சொல்லப் போனால் பகல் காட்சிக்கு செம கூட்டம். மேலும் வெகு பலருக்கு அவரை தெரிந்து இருக்கிறது.
நண்பரே! மணிரத்னத்துக்கான மரியாதை அவர் எடுத்த சினிமாவுக்காக அல்ல...கிணற்றுத்தவளையாக இருந்த தமிழ் சினிமாவை உலகம் முழுக்க வியாபாரம் செய்தமைக்காக!மணிரத்னம் Amerros perros , ET என்று தழுவுவதை விட புராணத்திலிருந்து தழுவி எடுப்பது எவ்வளவோ உத்தமம். தனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தின் கதை என்று தான் மௌன ராகம் படத்தை எடுத்தார். அது நல்ல இன்ஸ்பிரேஷன் தானே.ஆகச்சிறந்த தொழில்நுட்பக்கலைஞர்கள் , தயாரிப்பாளர் என வைத்துக் கொண்டு இவரால் சொந்தமாக ஒரு படைப்பைத் தர முடியவில்லை என்பது தான் வேதனை ஆக இருக்கிறது. அட்லீஸ்ட் நல்ல படங்களை சுட்டு தந்தாலே போதுமானது. ஏனென்றால் சமீப கால ரிலீஸுகளில் ஒன்றிரண்டை தவிர மற்றவை எல்லாம் குறைந்த பட்ச எண்டெர்டெய்ன்மென்டை கூட தர முடியவில்லை. அந்தவகையில் கமலும் மணிரத்னமும் கொஞ்சம் தேவலாம்.கொஞசம் நல்ல படங்களை சுடுவார்கள்.
தமிழின் நாளைய இயக்குநர்களெல்லாம் தமிழில் யாரையும் Mentor எடுத்துக் கொள்ள முடியாது. Sliding Doors படத்தை அப்பட்டமாக காப்பியடித்து 12 பி என்று எடுத்த பின் ஜீவா அளித்த பேட்டி இருக்கிறதே...யப்பா..குத்திக் கொல்லலாம் போல இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை மணிரத்னத்தை விட இந்தியில் மதுர் பண்டார்கர் அற்புதமான டைரக்டர்.
பின்குறிப்பு: அலைபாயுதே கல்கி தீபாவளி மலர் ஒன்றில் வெளியான சுஜாதாவின் சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதாவது அந்த சிறுகதை அலைபாயுதே படத்தின் கிளைமாக்ஸ் மட்டுமே..அதற்கு கண் காது மூக்கு வைத்து வெற்றிப்படமாக்கியது மணியின் கில்லாடித்தனம்.
//மணிரத்னம் எப்போதோ உலகத் தரத்தை எட்டி விட்டார்
you already said in your old post http://oliyudayon.blogspot.com/2009/07/blog-post_23.html
then why?
//மணிரத்னம் எப்போதோ உலகத் தரத்தை எட்டி விட்டார். என்ன தான் நாம் ‘காட்ஃபாதரை’ காப்பியடித்து விட்டார் என்று புலம்பினாலும் ‘டைம்’ நாளிதழ் கடந்த நூற்றாண்டின் சிறந்த படமாக ‘நாயகனை’ பட்டியலிட்டு விட்டது. இதே போல் மற்ற தமிழ் படங்கள் பட்டியலிடப் படுவது எப்போது?//
you said in your old post!!!
@ ரெட்டைவால்ஸ்
தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி...
@ Sri
That context is different from here. You just took a paraphrase from my old post and quoting it again. I did also mention the same thing in this post again. But the main theme is why Maniratnam is a bad example for future film makers. And I've explained it accordingly...
@ Saindhavi
ப்ரொஃபைலே இல்லாத கண்ட கருமாந்திரத்துக்கு எல்லாம் பதில் சொல்லனும்னு அவசியமில்லை. பை தி வே ஜேம்ஸ் கேமரூன் எனக்கு பெரியப்பா முறைங்க...
@ ரெட்டைவால்
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படமும், சுஜாதாவின் ‘அமுதாவும், நானும்’ கதையை தழுவி எடுக்கப் பட்டது தான். அமுதா அந்த மனித வெடிகுண்டு நபருடன் பேசும் அந்த சம்பவம் மட்டுமே கதை. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைக்கதையை வடிவமைத்த பெருமையும் சுஜாதாவையே சேரும்...
நம்மவர்களுக்கு என்றைக்குமே புராணங்கள் சலிக்காது. இதை சரியாகப் புரிந்து மார்க்கெட்டிங் செய்த, செய்பவர் மணிரத்னம்.வியாசரும் வால்மீகியும் வந்து சண்டையா போடப்போகிறார்கள் . அட்லீஸ்ட் அதையாவது சகித்துக் கொள்ளலாம். அஞ்சலிக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை என ஒரு கும்பல் இன்ற்ம் அங்கலாய்த்துக் கொள்கிறது.ஒரே படத்துக்கு எத்தனை முறை ஆஸ்கர் கொடுப்பார்கள். (ஈ.டி-ஸ்பீல்பெர்க்). இதை சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்!
oh I forgot you are a kid who watched alapuyudhe in his high school and became a "great critic" without any experience or knowledge about tamil cinema. LOL
கமல் வேட்டையாடு விளையாடுல சொல்ற மாதிரி "சின்ன பசங்க"
விடுங்கே. இப்போ தான் எழுத ஆரம்பிச்சி இருக்கான்.
சும்மா வெத்து சீனுக்கு பிளாக்கர் அக்கௌன்ட் வச்சிக்கிட்டு ஒரு போஸ்ட் கூட போடாதவங்க எல்லாம் வந்து இங்க கமெண்ட் போட வேண்டிய அவசியமே இல்லை.
Friend,
As far as i know Maounaragam is the only cinema he directed and in fact, this movie was also inspired from our own legend Magendran's Nenjathai killathey. I dont remember the novel of Jayakandhan but from there he copied the climax of MR without any credits to Jayakanthan. It is very unfortunate that our media and fake intellectuals hail Maniratnam. I do remember there was an article in Sunday express about why he didn't get national award despite his technicians and actors (including baby stars) fetching national level award. In that there was a guy replied in one sentence (i suppose it was Charuhasan) that his movies are not deserved to win an award.
cheers
//ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டிய சூழலில் வெளியான ’அலைபாயுதே’, ஆர்.செல்வராஜின் கதையிலும், சுஜாதாவின் வசனத்திலும் தப்பி பிழைத்தது //
உங்களுக்கு மனிரதம் மீது கோபமா இல்லை அவரின் திரை பட ங்ககளின் மீது கோபமா என்று தெரியவில்லை...
அலைபாயுதே ஆர்.செல்வராஜின் கதை தப்பி பிழைத்தது இது மிகவும் நகைப்பு தன வருகிறது ..கல்லூரி வாசலிலே என்ற படத்தில் கூட கதா நாயகன் , நாயகிக்கு தாலி கட்டிவிடுவான் பின் நாயகி அவனுடன் (கதா நாயகன் ) சேராமல் தன வசிபாள்....ஒரு திரைப்படத்திற்கு கதை முக்கியம் தான் அனால் . முன்று மணி நேரம் திரைபடத்தை தாங்குவது அதன் திரைகதை தான்...பிறகு வசனம் சுஜாதா ...சினிமா என்பது அனைவரின் கூ ட்டு முயற்சி ..திறமையான நபர் கள் சேர்த்தல் தான் (கூட்டனி) வெற்றி பெற முடியும் ....தளபதி(மணிரத்னம் ),குரு(அழகம் பெருமாள் )
// மணிரத்னம் திரைப்படங்கள் ‘ஏ’ செண்டர் ஆடியன்ஸ் எனும் பெருநகர மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று ஒரு வித மொக்கையான மேம்போக்கு நிலவி வருகிறது. அது ‘இருவரி’ல் பொய்த்தது என்றே கூற வேண்டும். என் சினீயர் ஒருவர் தெரிவித்த வரையில் இந்த படம் ஓடுவதற்கு ‘ஹிந்து’வில் மாய்ந்து, மாய்ந்து இந்த படத்தை பற்றி தலையங்கம் எழுதினார்களாம். அப்படியும் படம் சென்னையிலேயே, ஊஹீம்...
//
சென்னையிலேயே, ஊஹீம்.. என் என்றால் அப்பொழுது யார் ஆட்சி நடை பெற்றது என்று தெரியு ம் என்று ...நினைக்கிறான் ..அந்த திரை படத்தின் காட்சி அமமைபு அவளவு நேர்தியாகவும் , உண்மையாகவும் இருக்கும் ..
//
குரு’ - ’ஏவியேட்டரின்’ சர்க்கரை தடவி எடுக்கப்பட்ட (அ) ‘ஏவியேட்டரின்’ ரீமேக் ரைட்ஸ் வாங்கப்படாத இந்திய படைப்பு. இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை.
//
அது அனை வருக்கும் தேரியும் திரு.அம்பானி அவர்களின் வாழ்க்கை சரித்திரம் என்று ...ஏவியேட்டரின் நான் பார்த்தது இல்லை ... சில காட்சிகள் ஒன்றாக இருந்தது என்றால் ஒரு இன்ச்பிரதியன் குட இருக்கலாம்...இளையராஜா கூட சில திரைப்பட பாடல்கள் ஹிந்தி துலுவல் (கனவு காணும் வாழகைஎனும் பாடல்,ஜப்பானின் காலின ராமன் (காதல் வந்துரிச்சு ) இன்னும் சில )தான் அதர்கஹா அவரை இசை யணி இல்லை என்று சொல்லமுடியுமா ....
//இதனால் தான் மணிரத்னம் தன் படங்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்துகிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.
//
முன்னர் சொன்னது போல் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து தான் வெற்றி பெற முடியும் ...எ.ர ரஹ்மான் அன்று ரோஜா அறிமுகம் தான....//திறமை உள்ளவர்களி தான் பயன் படுத்த தான் வேண்டும் ...
திரு மணிரத்னம் அவர்களின் படைப்பு அனைத்தும் சிந்திக்க வைக்கும் சட்டம் என்பது மக்களை காக தான் தவிர அரசாங்கத்தை காக அல்ல ...என்பதை தன் திரை படம் வாயிலாக சொல்பவர் ...இதை இந்த நாடு மக்கள் நன்கு அறிவர் ....
@ ராஜா
மணிரத்னத்தை மாபெரும் இயக்குநர் என்று தூக்கி பிடிக்கும் கூட்டம் மேல் தான் கோபம். அந்த கோபம் தான் அவரின் படங்களில் உள்ள ஓட்டைகளை பற்றி குறை சொல்லத் தூண்டியது.
நல்ல படைப்பு
இதையும் பாருங்கள்
http://renikunda.blogspot.com/2010/05/blog-post.html
Ameer, Bala and Raam(Katrathu Tamil) are better in terms of their own scripts.
Mani is a good commander in getting the things right from everybody's end and delivering with flair. Oh yes, taking inspiration or plagiarized from others. It doesn't matter. At the end of the day, what matters is how you perceive the movie and how it relates to you.
Tomorrow I can write a blog saying that SURA is crap and vijay is bad. Next day i can get lotta comments just like your blog.
Again, its individual's opinion. If you dont like Mani, don't watch his flicks. Let the people claim as some best director. Whats the prob? When every Tom and Dick who has acted(read as appeared)in a couple of flicks, has a fan following Mani deserves more!
Anyways good write up. To me only Kanathil Muthamital is a good flick he did.
நண்பரே,
இளம் வயது, ஆங்கில மசலாப் படங்களையும், தமிழ் திரைப்படங்களையும் பார்த்து களித்திருந்த காலம்.
தரமான படமென்றால் என்னவென்று தெரியாது.கிடைப்பதை பார்த்து கதைத்து திரிந்தோம். ஆனந்த விகடந்தான் எங்களிற்கு பெரிய சினிமா விமர்சகர். அதில் 40மார்க் தாண்டினால் அது ஒரு தரமான படம் :)
இவ்வாறாக இருந்த வேளையில் நாயகன் எனக்கு ஒர் அற்புதமான திரைப்படமாகவே தோன்றியது. அக்னி நட்சத்திரம் ஜாலியான டைம் பாஸ் மசலா. அதில் வந்த பாடல்கள் ஹிட் என்றால் செம ஹிட். முனுமுனுக்காத இளம் உதடுகளே இல்லை எனலாம்.
அஞ்சலி, நெகிழ வைக்கும் கதை, பாடல் காட்சியை விட ET எங்கு வந்தது என்று புரியவில்லை. சில வேளைகளில் அஞ்சலியை ET யாக பார்த்திருப்பார்களோ என்னவோ.
பின்பு காட் ஃபாதரைப் பார்த்த போது அட இந்தக் காட்சியின் காப்பிதானா அந்தக் காட்சி, அந்தக் கதை என்றது புரிந்தது. கலைஞனின் மேல் இருந்த மதிப்பு குறைந்தது.
கன்னத்தில் முத்தமிட்டால் சிரிப்பை மட்டுமே வரவழைத்தது.
அலை பாயுதேயில் பாடல்கள் நன்றாக இருந்தன. பச்சை நிறமே பாடல் இன்றும் பார்க்க கேட்கப் பிடிக்கும்.
இன்று மணிரத்னம் அவர்கள் இடமிருந்து நான் எதையும் புதிதாக எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. நான் காத்திருக்காதது தவறு என்று அவர் நிரூபித்தால் எனக்கு மகிழ்ச்சியே.
மனதில் உள்ளதை எழுதியிருக்கிறீர்கள். சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள்.
பிரசன்னா - படுபயங்கர லேட்டாக உங்கள் பதிவைப் பார்த்து, அதைவிட படு லேட்டாக இந்தப் பின்னூட்டமிடுகிறேன் . .
வெல்.. மணிரத்னத்தைப் பற்றி, காதலர் எழுதியுள்ளதே என்னுடைய கருத்தும். ஆதிகாலத்தில், அக்னி நட்சத்திரத்தில், அட.. இதில் காட்சிகள் படு தெளிவாகத் தெரிகிறதே என்ற குஷியில் இவரைக் கவனிக்க ஆரம்பித்தது.. அதன்பின், நாயகன் பார்த்தபோது, மகிழ்ந்தது.. பின் அவரது ஒவ்வொரு படங்களாக அவதானிக்க ஆரம்பித்தது.. இப்படிச் சென்றது மணிரத்னத்துடனான எனது உறவு..
அவரது பல படங்கள், உலக சினிமாவிலிருந்து உருவப்பட்ட ஈயடிச்சாங்காப்பிகளே என்பதை, உலக சினிமா பார்க்கத்துவங்கியபின் அறிந்தேன் . .
குறிப்பாக, ஆய்(த) எழுத்து என்ற அவரது படம் - பெயருக்கேற்றபடியே அமைந்தது. அமோரஸ் பெர்ரோஸைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இந்தப் படம் பார்த்து, இந்த ஆளின் மேல் இருந்த மரியாதை குறைந்து, அசூயையே ஏற்பட்டது.
இப்படியாக, இந்தியாவே ’வியந்து போற்றும்’ இந்த அட்டக்காப்பி இயக்குநரை நான் அவ்வப்போது ‘உற்சாகத்தில்’ கன்னா பின்னாவென்று திட்ட, எனது நண்பர்கள் என்னை சாந்தப்படுத்த.. இவ்வாறாகக் கழிகிறது காலம்..
சமீபத்தில், சென்ற வருடம் பிச்சாவரம் சென்றபோதுகூட, சாருவோடு கழிந்த இன்பமான பொழுதுகள், இந்த அட்டக்காப்பி இயக்குநரைப் பற்றிய பேச்சு வந்தபோது, பகார்டியும் டெக்கீலாவும் என்னுள் இயங்க, அதிவேகப் பேச்சு ஒன்றை நிகழ்த்தி, இந்தக் காப்பி படங்களைப் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்ற, அதிலிருந்து நண்பர்கள் என்னை எங்கு பார்த்தாலும், ‘மணிரத்னம் ஏய்யா நல்ல படமே எடுக்க மாட்றாரு?’ என்று கலாய்க்கவே ஆரம்பித்துவிட்டார்கள் :-)
முடிவாக ஒன்றே ஒன்று - மணிரத்னத்தின் படங்களை எதிர்பார்ப்பதை நான் அடியோடு நிறுத்திப் பல காலம் ஆகிறது.. ஆயினும் ஒன்றே ஒன்றை மட்டும் அவரது படங்களில் இருந்து அவதானிக்காமல் இருக்க இயலவில்லை.. காதல் காட்சிகளில் மனிதர் ஜித்தராக இருக்கிறார்... என்னதான் காப்பிப் படமாக இருந்தாலும், அவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் என்னை இதுவரை மிகவும் கவர்ந்து வந்துள்ளன.. (உதா: குரு. அதில் ஐஷ்வர்யா, அபிஷேக்கைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு பிரமிப்பும் ஆனந்தமும் பொங்கும்.. அதுவும், அந்த ரயில் காட்சி.. கல்யாணத்துக்குப் பின்)..
இந்த ஒரு விஷயத்தில் மட்டும், மணிரத்னத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.. :-)
அருமையான பதிவு.. ஆழ்ந்த ஆராய்ச்சி.. பிடியுங்கள் பாராட்டை..
//படத்தின் காட்சிகள் துண்டு, துண்டாக இருக்கும் போது ரசிக்கக் கூடியதாய் இருந்தாலும்//
ஆய்(த) எழுத்துக்கு நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கருத்தை நான் வன்மையாகவும், தொன்மையாகவும், இன்னும் என்னென்னவோவாகவும் மறுக்கிறேன் :-) ..
தமிழ்நாட்டு அரசியல் சூழலில், ஒரு காலேஜ் பொடிசு வந்து ஒரு அரசியல்வாதியை எதிர்ப்பதும், அந்த அரசியல்வாதி அதற்கு ரொம்ப லேசாக பதிலடி கொடுக்க முயல்வதும், அந்தப் பொடிசு எலக்ஷனில் ஜெயிப்பதும், சட்டமன்றத்துக்குப் போவதும்... என்னய்யா நடக்குது இங்க . . ? ஒரே தடவ எதிர்த்தாலும் சரி.. போட்டுத் தள்ளிருவாங்க . . அப்படி இருக்கும்போது, இந்த மாதிரி கேலிக்கூத்து காமெடி சீன்கள் எல்லாம் யார் காதில் பூ சுற்ற?
மட்டுமல்லாமல், அப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுமே, ஒரு ஆர்டர் இல்லாமல், இஷ்டத்துக்கு நடந்துகொள்வதையும் பார்க்கலாம்.. மாதவன், சொந்த அண்ணனையே கொன்றுவிட்டு, அதற்குக் காரணமான ஆளிடம் போய் சரண்டர் ஆவதெல்லாம்... வெல்.. கிறுக்குத்தனமான திரைக்கதையமைப்புக்கு ஒரு உதாரணம் இல்லையா? அப்படிச் செய்யலாம்.. ஆனால், அதற்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் வேண்டாமா? எதைவேண்டுமானாலும் மக்கள் பார்ப்பார்களா?
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.. இல்லையெனில், ஆய்(த) எழுத்துக்குப் பெயர்க்காரணம் வரைய நான் ஒரு பதிவையே எழுத வேண்டியிருக்கும்.. ஆமாம் :-)
@ கருந்தேள்
அப்பா... எத்தனை பெரிய பின்னூட்டம். இந்த பதிவில் விவாதித்து, விவாதித்து போரடிச்சிருச்சுங்க. இதுக்கு மேல என்ன நான் சொல்றதுன்னே தெரியலை.
எப்பிடியாயினும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...
பிரசன்னா, கருந்தேள் பகிர்வின் மூலம் இப்பக்கம் வந்து சேர்ந்தேன். உங்கள் மனதில் பட்டதை, ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறீர்கள்.
மணிரத்னத்தின் முந்தைய கால படங்களை அப்போது சிறுவனாக ரசித்து பார்த்திருக்கிறேன்... அதனுடன் வளர்ந்திருக்கிறேன்... டயலாக்களை மனப்பாடம் செய்திருக்கிறேன்..
ஆனால், வளர வளர, மற்ற சினிமா அறிமுகங்கள் இவை வெறும் போலி காப்பிகளா என்ற எண்ணம் மேலோங்கி கொண்டே சென்றது.
உதாரணத்திற்கு ஒரு சின்ன கதை...
ஒரு சமுதாயத்தில் ஒருவன் வேக வேகமாக வளர்கிறான்... வெளிநாட்டின் அறிமுகம் இல்லாத அம்மக்களிடம், தன் வெளியுலக பிரதாபம் மூலம் கற்று தெரிந்தவைகளை தன் வித்தைகளாக படம் பிடித்து காட்டுகிறான்... மக்கள் அவனை சிறந்த கலைஞனாக ஏற்றுக்கொள்கிறார்கள்...
ஊருக்கு கலர் டிவி வருகிறது... கேபிளும் வருகிறது... மக்களுக்கும் வெளியுலக விவரங்கள் கைவருகிறது..
பிறகு, அம்மனிதனை யாரும் சட்டை கூட பண்ணுவதில்லை... உண்மை அவர்களுக்கு புலப்பட்டு விட்டது.
ஆனாலும், இன்னம் சிலர் தங்கள் பால்ய கால ஏமாற்றங்களை தாஙக முடியாமல் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு உண்மைகள் உரைத்தாலும், தங்கள் இளபிராய ஏமாற்றங்களை தங்களுக்குள்ளேயே அடக்கி கொள்கிறார்கள்...
அதை பற்றி பேசும் மக்களிடம் அவர்கள் கோபத்தை திணிக்கிறார்கள். விசயம் புரிந்தவர்கள் இதையும் ஒதுக்கி தள்ளுகிறார்கள்...
நான் சொன்ன கதை மாணிக்கரத்தினத்துக்கும் பொருந்தும்.
அருமையான பகிர்வு. நன்றி.
மணிரத்னம்... he has been over credited and over appreciated.அவ்ளோதான்.அது தான் உண்மை.it's plain and simple.
நன்றி செந்தழல் ரவி...
Post a Comment