2 டியில் இருந்து 3 டிக்கு |
ஹாலிவுட்டில் இப்போது போட்ட காசை எடுக்க வேண்டுமா? 3டி படம் எடுத்தால் போதும். போட்ட காசு கண்டிப்பா உஷார் ஆகும். அதற்கு தெளிவான ஒரு உதாரணம் அவதார். அவதார் வசூலைக் குவிக்கவும், ஹாலிவூடின் ஒவ்வொரு ஸ்டுடியோவும் ஆளுக்கு நான்கைந்து 3டி படங்களை எடுக்கத் தொடங்கி விட்டனர். சாதரணமாக ஒரு திரைப்படத்திற்கு 10 டாலர் டிக்கட் என்றால், 3 டி படம் என்றால் கூடுதல் கட்டணமாக 3 டாலர் வசூலிக்கின்றனர் தியேட்டர்காரர்கள் . இதில் ஐமேக்ஸ் 3டி என்றால் 5 டாலர் எக்ஸ்ட்ரா. ஆக மொத்தம் ஒரு ஐமேக்ஸ் 3 டி படத்திற்கு 15 டாலர் தண்டம் அழுக வேண்டிய கட்டாயம். 10 டாலரில் முடிய வேண்டிய படம் 15 டாலர் செலவில் வந்து முடிகிறது.
'வடை போச்சே' - 3 டியில் வந்து இருக்க வேண்டிய படம் |
என்னைப் போன்ற மாணவர்களுக்கு சில சலுகைகள் உண்டு, ஒரு சில திரையரங்குகளில் 3 டாலருக்கு டிக்கட் கிடைக்கும். தியடரும், சத்யம் அளவிற்கு நன்றாக இருக்கும். அந்த திரையரங்குகளில் கூட 3டி படத்திற்கு எக்ஸ்ட்ரா தண்டம் அழுக வேண்டும். ஆனால் நீங்கள் நினைப்பது போல் 3டி திரையரங்குகளை நிறுவுவது அத்தனை சுலபம் அல்ல. தியேட்டர் காரர்களுக்கு செலவு பின்னி எடுத்து விடும். நான் வசிக்கும் பெருநகரில் 30 திரையரங்கம் கொண்ட மல்டிப்லேக்சில் ஒரு ஐமேக்ஸ் திரையரங்கம், மற்றும் இரண்டு 3டி திரையரங்குகள் தான் உள்ளன.
3டி தொழில்நுட்பம் ஒரு காலத்தில் சீந்துவார் இல்லாமல் இருந்தது. காரணம் நிறைய செலவு பிடிக்கும் சமாசாரம். 3டி காமிராவிற்கு வாடகை கொடுத்தே ஸ்டுடியோக்களுக்கு கட்டுப்படி ஆகாது. அதை விலை கொடுத்து வாங்கினாலும், அந்த படம் முடிந்தவுடன் அது மூலைக்கு போய் விடும். அடுத்த 3டி படம் ஆரம்பிக்கும் வரை அதற்கு பராமரிப்பு செலவு வேறு செய்ய வேண்டும்.
இப்போது அந்த காமிராக்கள் எல்லாம் சல்லிசாகவே கிடைக்கின்றன. பத்தாதிற்கு 2 டியில் படம் எடுத்து விட்டு அதை 3 டிக்கு மாற்றி விடும் தொழில்நுட்பங்களும் இப்போது வந்துவிட்டன. எந்திரன் திரைப்படத்தைக் கூட அப்படி தான் மாற்ற வேண்டும் என்று சங்கர் நினைத்தாராம். ஆனால் அந்த மாற்றும் செலவு இன்னொரு எந்திரன் படம் எடுக்கும் அளவிற்கு இருந்ததாம். ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு இதெல்லாம் சும்மா ஜுஜுபி. படம் டொமெஸ்டிக் மார்கெட்டில் (யு.எஸ்) சரிவர போகவில்லை என்றாலும் சர்வதேச மார்கெட்டில் காசு அள்ளி விடுவர். ஆனாலும், இந்த 2 டியில் இருந்து 3 டியாக மாற்றினால் அது ஒரிஜினல் 3டி அளவிற்கு விசுவல் அனுபவத்தைத் தராது.
"Shrek" நான்காம் பாகமும் 3 டியில் வருகிறது |
ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஆளுக்கு நான்கைந்து 3 டி படங்கள் எடுக்கிறார்கள் என்று சொன்னேன் இல்லையா. இதனால் சரிவர 3டி தியேட்டர்கள் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர் ஸ்டுடியோக்காரர்கள். அப்படியே படம் ரீலிஸ் ஆனாலும் நன்றாக ஓடிக் கொண்டு இருக்கும் போதே அடுத்த படத்தைப் போட வேண்டிய நிலை. அப்படியும் மேலும் மேலும் படத்தை எடுத்து தள்ளிக் கொண்டே இருகிறார்கள். இந்த வருடம் மட்டும் இன்னும் 35 முப்பரிமான படங்கள் வரப் போகுதாம். இதில் 2டியில் எடுத்து 3டிக்கு மாற்றப் பட்ட படங்கள் கணக்கில் இல்லை.
"Tron Legacy" கொக்கா மக்கா 3 டி மிரட்டல் |
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தன்னுடைய "Clash of the Titans" ரீமேக் திரைப்படத்தை 2டியில் தான் எடுத்தது. அவதாரைப் பார்த்து குத எரிச்சல் அதிகமாகி , தற்போது இதை 3டி க்கு மாற்றி காசு பார்க்க முயல்கின்றனர். ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாக வேண்டும், ஆனால் முன்கூட்டியே இந்த மாதமே திரையடுகின்றனர். மொக்கை வேம்பயர் படங்களான Twilight சீரியசின் இறுதி பாகத்தையும் முப்பரிமாணத்தில் வெளியிடப் போகின்றனராம். 3டியா... உவ்வே என்ற மைக்கேல் பே, டிரான்ஸ்பார்மர் மூன்றாம் பாகத்தை, ஸ்டுடியோவின் கட்டாயத்தின் பேரில் முப்பரிமாணத்தில் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இதில் முழித்து கொண்டவர் மசாலா திரைப்படங்களை தயாரிக்கும் மன்னனான Jerry Bruckheimer தான். தன்னுடைய Prince of Persia படத்தை 3டியில் எடுக்க எண்ணியது போது அந்த ஆளுடைய இன்னொரு தயாரிப்பான G Force பயங்கரமாக ஊத்திக் கொண்டதால் ரெண்டு பரிமாணமே போது மூணு பரிமாண ஆணியெல்லாம் புடுங்க வேணாம் என்று இந்த படத்தின் விநியோகஸ்தர்களான டிஸ்னி கூறி விட்டதாம்.
"Tron Legacy " - ஒபெநிங் எல்லாம் நல்லா தான் இருக்கு |
இதெல்லாம் சரி. உண்மையிலேயே 3டி படம் பார்க்கும் போது நமக்கு அருமையான காட்சி அனுபவம் தான். ஆனால் அதனால் விளையும் தீங்குகளையும் பார்க்க வேண்டாமா. முப்பரிமானம் என்றால் அது உண்மையிலேயே முப்பரிமானம் கிடையாது. இரண்டு காமிராக்கள் ஒரே காட்சியை இரு வேறு பரிணாமங்களில் படம் பிடிக்க, அதை இரு ப்ரோஜெக்டர்கள் ஒரே நேரத்தில் திரையிடும். அதனால் தான் நீங்கள் 3டி கண்ணாடியை எடுத்து விட்டு பார்த்தீர்கள் என்றால் தெளிவான காட்சி இருக்காது. இந்த இரண்டு இமேஜ்களையும் நாம் அணிந்திருக்கும் 3டி கண்ணாடி ஒன்றாக தொகுக்கும் போது நமது மூளை அதை முப்பரிமான படமாக புரிந்து கொள்ளும். இதனால் கண்கள் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும். முப்பரிமாணக் காட்சிகளை புரிந்து கொள்ளும் மூளை விரைவிலேயே சோர்வு அடையும். அது மட்டுமல்லாது, இந்த திரையரங்கில் கொடுக்கப் பெறும் கண்ணாடிகள் சரியான முறையில் மறு சுழற்சி அல்லது சுத்திகரிக்கப் படுகின்றனவா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி. இங்க அமெரிக்காவில் செய்தாலும், நம்ம ஊரு சத்யம் தியட்டரில் கூட இதை செய்கிறார்களா என்றால் அதுவும் டவுட்டு தேன்.
"Up" 3 டியில் மிகப்பெரும் ஹிட்டானதைத் தொடர்ந்து "Toy Story" யும் 3 டியில் |
இதெல்லாம் காட்டிலும் இன்னுமொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அவதார் வசூலை அள்ளி குவித்ததற்கு அதன் கதையம்சம் ஒரு மிகப் பெரிய காரணம். அதைக் கண்டுகொள்ளாமல் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாய் அதே போல் எடுக்கிறேன் பேர்வழி, என்று மொக்கைகள் தான் சில சமயம் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.
10 comments:
எந்திரன் படத்தை 3டியில் எடுக்கலைன்னா கூடப் பரவாயில்லை. அட்லீஸ்ட்.. அதை ஐமேக்ஸ் ஃபார்மேட்டுக்கு மாத்தி இங்க ரிலீஸ் பண்ணினா பரவாயில்லை.
3டி படம் பார்த்தா எல்லாருக்கும் தலைவலி வரும்னு சொல்ல முடியாதே. அதை சரிபண்ணத்தானே இப்ப ஃப்யூஷன் கேமரா வந்திருக்கு?
அப்புறம்... டாய் ஸ்டோரி 1-2 கூட.. கம்ப்யூட்டரில் இன்னொரு கேமராவை வர்ச்சுவலா வச்சித்தான் 3டி-க்கு கன்வர்ட் பண்ணினாங்க. அது அத்தனை செலவு சமாச்சாரமா நான் கேள்விப் படலையே?
ஆலிஸ் படம் கூட இதே கேட்டகரிதான்.
இதை நேத்தே டைப் பண்ணிட்டேன். பப்ளிஷ் பட்டனை க்ளிக் பண்ணாம வீட்டுக்கு போய்ட்டேன். :(
பாலா நான் சொல்வது 80 களில், அப்போது இந்த டெக்னாலஜியை சீந்துவார் இல்லை. இந்தியாவில் 'மை டியர் குட்டிச்சாத்தான்', நம்பியார் நடித்த 'தங்க மாமா' போன்ற படங்கள் 3 டியில் எடுக்கப்பட்ட போது கூட, இங்கே ஹாலிவூடில் அத்தனை 3 டி படங்கள் வரவில்லையே. அதற்கு முக்கிய காரணம் தியேட்டர் உரிமையாளர்களிடம் இந்த படங்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லை. இப்போது தான் அதன் 'அருமை, பெருமைகளை' ($$$$) உணர்ந்து இருக்கின்றனர்.
எந்திரன் ஐ மேக்சுக்கு கன்வெர்ட் செய்யப்பட்டாலும் ஜாக்சொன்வில்லில் முதலில் ரிலீஸ் ஆகுமா? ஹய்யோ ஹய்யோ...
//
இதை நேத்தே டைப் பண்ணிட்டேன். பப்ளிஷ் பட்டனை க்ளிக் பண்ணாம வீட்டுக்கு போய்ட்டேன். :(
//
என்ன பண்றதுங்க. கொஞ்சம் அட்வான்சாகவே யோசிக்க ஆரம்பிச்சுட்டோமா அதனால தான்... :D
//
3டி படம் பார்த்தா எல்லாருக்கும் தலைவலி வரும்னு சொல்ல முடியாதே. அதை சரிபண்ணத்தானே இப்ப ஃப்யூஷன் கேமரா வந்திருக்கு?
//
//
3டி படம் பார்த்தா எல்லாருக்கும் தலைவலி வரும்னு சொல்ல முடியாதே. அதை சரிபண்ணத்தானே இப்ப ஃப்யூஷன் கேமரா வந்திருக்கு?
//
நீங்க சொல்றது சரி தான் பாலா. எல்லாருக்கும் தலைவலி வராது தான். ஆனால் எல்லாராலும் அதை உணர முடியாது. எங்கள் பல்கலையில் Brain and Behavior என்ற ஒரு பாடம் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி உண்டு. நானும் அந்த கிளாசில் என்ரோல் செய்துள்ளேன். அதன் ஒரு பகுதியாக 3 டி படம் பார்த்தால் அவர்களின் மன அலைச்சுழலை (Mind Frequency waves) பரிசோதித்து பார்த்தோம். சாதாரண படம் பார்த்தவர்களுக்கும், 3 டி படம் பார்த்தவகர்ளின் மன அழைசுழலும் வெகுவாக வேறுபட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தான் நான் அவ்வாறு சொன்னேன். நாங்க ஆதாரம் இல்லாம எதையும் பேச மாட்டோம்ல... ஹி ஹி...
வருகைக்கு நன்றி பாலாஜி. கண்டிப்பாக பார்க்கிறேன்...
நண்பரே,
காட்சிகளின் பிரம்மாண்டத்திற்கு மட்டுமே இந்த வகை தொழில் நுட்பங்கள் உதவுகின்றன என்பது என் கருத்து. கதையம்சம் உள்ள படம் இவை இல்லாமலும் கூட ரசிக்கப்படக் கூடியதே. ஆனால் 3டி, ஐமாக்ஸ் என்பன சினிமாத் துறையில் மந்திரச் சொற்களாகி வருகின்றன. இங்கு இந்த நுட்பங்களை திரைக்கு எடுத்து வரும் திரையரங்குகளை விரல்களில் எண்ணிடலாம். அவதார் வெளியான சமயம் திரையரங்கிற்கு வெளியே இது 3டியில் திரையிடப்படவில்லை என்ற அட்டை வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள், திரையரங்குகளிலும் திரைப்படங்களிலும் மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்கள் யாவும் இவவ்கையான தொழில் நுட்பங்களை நாடுவது காசு பார்ப்பதற்காகவேயிருந்தாலும், அதனைக் காசு தந்து ரசிகர்கள் ரசிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதனையும் மறுக்கவியலாது. நல்லதொரு பதிவு.
//
குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்கள் யாவும் இவவ்கையான தொழில் நுட்பங்களை நாடுவது காசு பார்ப்பதற்காகவேயிருந்தாலும், அதனைக் காசு தந்து ரசிகர்கள் ரசிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதனையும் மறுக்கவியலாது.
//
உண்மை தான் கனவுகளின் காதலரே... வருகைக்கும், கருத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி
பல அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பிரசன்னா.அப்போ நீங்க பிஜி ஸ்டூடண்டா?ஸ்பெஷல் சலுகைல ஒருபடம் விடாம பார்க்கறீங்க?ஜமாய்ங்க.எப்போ படிப்பு முடியுது?:)))
@ கார்த்திகேயன்
ஆமாம் பாஸ். என்னோட ப்ரொபைல்லயே அதை போட்டு இருக்கேனே. எல்லா படங்களையும் இப்போல்லாம் பார்க்க முடியறதுல்லை. வர்ற ஆகஸ்டுல ஒரு வழியா படிப்பை முடிக்கப் போறேன்...
Post a Comment