Friday, February 5, 2010

கர்ண மோட்சம் குறும்படத்திற்கு தேசிய விருது


நானும் முரளியும் எந்த புள்ளியில் நண்பர்கள் ஆனோம் என்று சத்தியமாக நினைவில்லை. ஆனால், நாங்கள் இணைவதற்கு காரணமாக இருந்தவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். என் நண்பன் தென்னரசு ஓர்குட்டில் எஸ்.ராவிற்காக ஒரு குழுமத்தை தொடங்கிய பொது தான் நானும் முரளியும் நண்பர்கள் ஆனோம். 2006 அக்டோபர் மாதத்தின் ஒரு மதிய வேளையின் போது தான் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் அன்று பார்த்த திரைப்படம் 'சென்ட்ரல் ஸ்டேஷன்'. அவருடைய முதல் குறும்படமான 'அக்காலம்' படத்தை அன்று தான் பார்த்தேன். 15 நிமிடம் ஓடும் அந்த குறும்படத்திலேயே மனிதர் பல சங்கதிகளை சொல்லி இருந்தார். அப்போது தான் 'கர்ண மோட்சம்' போஸ்டரை அவர் அறையில் பார்த்தேன். கதை, வசனம் - எஸ். ராமகிருஷ்ணன். திரைக்கதை, இயக்கம் - ச.முரளி மனோகர் என்று போட்டிருக்க, எனது ஆவல் கூடியது. வெகு விரைவில் டி.வி.டி வந்து விடும், காட்டுகிறேன் என்றார்.


அதே போன்ற ஒரு மதிய நாளில் தான் 'கர்ண மோட்சம்' குறும்படத்தை பார்த்தேன். எஸ்.ராவின் 'உபபாண்டவம்' என்னுள் மகாபாரதத்தின் மீதான காதலை அதிக படுத்தி இருந்தது. அவருடைய அந்த நாவலின் சமகாலப் பிரதியாகத்தான் இந்த குறும்படம் எனக்கு தோன்றியது. ஒரு 13 நிமிட குறும்படம் இவ்வளவு வலிமையான செய்தியை சொல்ல முடியுமா என்று, அது வரை எனக்கு தோன்றி இருக்கவில்லை. இந்த குறும்படத்தை வழக்கமான விமர்சனம் போல் எழுத முடியவில்லை. அதனால் இந்த படத்தை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.


இது வரை 60க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று இருக்கும் 'கர்ண மோட்சம்', 2008 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த குறும்படம் மற்றும் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருதை வென்றுள்ளது. இது மட்டுமல்லாது கேரளா சர்வதேச திரைப்பட விழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா, கனடிய சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஆகியவற்றில் சிறந்த குறும்படம் மற்றும் இயக்குனருக்கான விருதை வென்று உள்ளது.

இதற்க்கெல்லாம் மகுடமாக இந்திய அரசின் தேசிய திரைப்பட விருது 'கர்ண மோட்சத்திற்கு' கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெரும் முதல் தமிழ் குறும்படம் 'கர்ண மோட்சம்' என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தமிழ் மீடியாக்கள், பாலா சிறந்த இயக்குனர் விருது பெற்றதை பற்றி மட்டும் எழுதி இருந்தன. வெகு நாட்கள் கழித்து, ஒரு வழியாக இந்த வார ஆனந்த விகடனில், முரளியினுடைய பேட்டி வெளியாகி உள்ளது. அவருடைய அனுமதியின் பேரில் உங்கள் அனைவரின் பார்வைக்காக, இந்த குறும்படத்தை இங்கு பதிவிடுகிறேன்.

கர்ண மோட்சத்திற்கு விருது கிடைத்ததற்கான ஆதார பட்டியல் இங்கே


முதல் பாகம்:


இரண்டாம் பாகம்:


இது வரை எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இந்த குறும்படத்தின் ஆதார செய்தி மட்டும் நினைவில் வந்து போகிறது: 'கதிரவன் ஈன்ற மைந்தன் அதிக பலமுடையோன்"

போகிற போக்கில் ஏதேனும் பின்னூட்டங்களும், அதோடு தமிழ்மணத்திலும் தமிழிசிலும் ஓட்டு போடுங்கள்...

பின் குறிப்பு: இந்த வீடியோவை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் உபயோகிக்க நினைத்தால் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டம் இட்டு செல்லுங்கள். காரணம்: யூடியுப் இணையதளத்தால் காப்பி ரைட் செய்யப்பட வீடியோவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது...

16 comments:

Prakash said...

முதல் வரியிலேயே வார்த்தையின் நடுமண்டையில் கட்டையால் அடித்து கட்டுடைத்திருக்கிரீர்கள் தோழர் அதன் பின் டாப் கியரில் பொய் அருமையான ஒரு பதிவை போட்டிருக்கிறீர்கள் வாழ்த்துகள் , உங்களுக்கு இல்லை முரளிக்கு

Prasanna Rajan said...

அடங்கப்பா. பதிவு போட்டது நான். குறும்படம் எடுத்தவர் அவரு. என்ன ஒரு வில்லத்தனம்...

selventhiran said...

படம் பார்த்து முடித்ததும் விழியில் நீர் கோர்க்கிறது. அருமையான இடுகை.

Prasanna Rajan said...

இந்த படத்தை பார்த்த பின் விழி ஓரத்தில் நீர் கோர்ப்பது ஒரு இயல்பான நிகழ்வு. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி செல்வேந்திரன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கஷ்டப்படுவது கலைஞன் மட்டுமல்ல.. நமது கலையும்.. இனியாவது சிந்திப்போமா?

Raju said...

முரளிக்கு வாழ்த்துக்கள்..!

Prasanna Rajan said...

கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்ததின் விளைவாகத் தான் ‘சென்னை சங்கமம்’ போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகைக்கு கருத்துக்கும் நன்றி கார்த்திகை பாண்டியன் மற்றும் டக்ளஸ் அவர்களே...

karthi said...

"படம் பார்த்து முடித்ததும் விழியில் நீர் கோர்க்கிறது. "

true.

Saravan said...

Could you please tell me where can I buy the DVD?

Thanks,
Saravan.

Prasanna Rajan said...

Hi Saravan. If you are in India, especially in chennai, I could give you the mobile number of the director. And he could mail the DVD to you on payment or you can get it in person.

Muthuvelkumar said...

very nice

தோழி said...

Hello Prasanna,

Excellent Short movie. Brings out lot of pain in heart. can i have the mobile number of the Director?

Thanks

Prasanna Rajan said...

Hi thozhi. Somehow I lost his number. You can e-mail him and ask his number. His e-mail is: kalaiyalan@gmail.com

Muruganandan M.K. said...

சிறப்பான பதிவு. இக்குறும்படம் பற்றிய முதல் பதிவாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

இதனை இணையத்தில் ஏற்றி எமது பார்வைக்குத் தந்ததற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

அவரது முதல் படமான அந்தக் காலம் பற்றி எழுதியிருந்தீர்கள். அதுவும் இணையத்தில் கிடைக்கிறதா?

Murali Manohar said...

thanks prasanna... and thanks to all who witnessed Karna Motcham and made comments here...

Murali Manohar said...

thanks prasanna... and thanks to all who witnessed Karna Motcham and made comments here...

Share