18 வயதில் எல்லோரும் போல நம்ம மேட்டுக்கு கல்லூரி செல்ல பிடிக்கவில்லை. ஒரு வீடியோ கேம் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து, பின்னர் ஒரு வீடியோ கேம் பத்திரிக்கையில் எடிட்டராக இணைந்தார். கிடார் ஹீரோ போன்ற பிரபலமான கேம்களை வடிவமைத்த ஆக்டிவிஷன் மேட்டை தங்களது நிறுவனத்தில் கேம் டெவலப்பராக இணைத்துக் கொண்டது. தனது நண்பர்கள் கல்லூரி முடித்து வேலை தேடி கொண்டிருந்த சமயம், மேட் ஆண்டுக்கு 6 இலக்க அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கி கொண்டிருந்தார். ரெம்ப சீக்கிரமா எல்லாவற்றையும் பார்த்த மேட்டுக்கு வாழ்க்கை போரடித்து விட்டது. தீடீரென்று ஏதோ முடிவெடுத்து தான் பணிபுரிந்த வேலையை விட்டு கிளம்பி விட்டார்.
அவருடன் பணி புரிந்த நண்பர்கள், ஒரு நாள் ‘நாளை ஆஸ்திரேலியா போகிறோம், வருகிறாயா’ என்று அழைக்க, அவர்களுடன் கிளம்பியிருக்கிறார். பயணத்தின் போது ஒரு வரலாற்று சின்னம் எதிரில் வழக்கமாக டூரிஸ்ட்கள் போஸ் கொடுப்பது போல் கொடுக்க, அவரத நண்பர் கடுப்பாகி இருக்கிறார். ”ஏன் எல்லாரையும் போல் போஸ் கொடுக்கிறாய், அது தான் நீ மோசமாக ஆடுவாயே, அது போல ஆடு” என்று சொல்லியிருக்கிறார். அப்போது மேட்டுக்கு தெரியவில்லை, தான் ஆடும் மோசமான ஆட்டம் தன் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடும் என்று.
தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், அதே போல் மோசமாக டான்ஸ் ஆடி அதையெல்லாம் தொகுத்து ஒரு வீடியோவாக யூடியுபில் போட, ஒரே இரவில் இண்டெர்னெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார் மேட். தனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அஞ்சல்கள் வந்ததாக சொல்லும் மேட், ஒவ்வொன்றிலும் மக்கள் தங்கள் ஊருக்கு வருகை தருமாறு மேட்டிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். வேலையும் இல்லாமல், காசும் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்த மேட்டுக்கு Stride என்னும் சூயிங் கம் கம்பெனி கை கொடுத்தது. பிறகு என்ன, தனது பேக்கை மாட்டி கொண்டு உலகம் சுற்ற ஆரம்பித்தார் மேட்.
தான் சென்ற இடங்களிலே தனக்கு மிகவும் பிடித்த இடமாக நியூ கினியை (New Guinea) குறிப்பிடுகிறார் மேட். அங்குள்ள பழங்குடி மக்களுடன் அவர் ஆடிய நடனத்தை தன்னால் மறக்க முடியாது என்று சொல்கிறார். சென்ற ஆண்டு அவர் சுற்றிய நாடுகளின் தொகுப்பு அடங்கிய வீடியோ இதோ:
இன்னும் வேற வேற இடங்களுக்கு சென்று இதே போல் ‘டான்ஸ்’ ஆட மேட்டை வாழ்த்துவோம்.
8 comments:
ஹா ஹா ஹா , கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தான் நான் கூட ஆடி இருப்பேனே. இவரை விட நான் தத்தக்கா பித்தக்கா என்று ஆடுவேன் :D . எப்படியா புதுசு புதுசா பதிவு போடறீங்க
விசா விளம்பரத்தில் இவர் தான் வருவாரா பிரசன்னா ?
எனது பல்கலை புத்தகக் கடையில் பகுதி நேரத்திற்கு வேலை பார்க்கிறேன். பொழுது போகாதப்ப இந்த ஆளைப் பத்தி ஒரு புத்தகத்தில் படிச்சேன். அதான் பதிவா போட்டுட்டேன். :D
ஆமாம் விசா விளம்பரத்தில் இவர் வருவார்.
நண்பர் பிரசன்னா உங்களுக்கு intresting blog விருது வழங்கியுள்ளேன்.
இந்த அறிவிப்பை என் வலை பூவில் பார்க்கவும்.
நண்பர் பிரசன்னா(ஒளியுடையோன்)மிக நன்றாக இலக்கிய ரசனையுடன் எல்லா நல்ல திரைப்படங்கள் மற்றும் இசை,கதை ,கட்டுரை,சமூக நல விஷயங்களை ஆராய்ந்து எழுதுகிறார். இவர் மேலும் பல படைப்புகளை தரவேண்டும் .
http://oliyudayon.blogspot.com
மிக்க நன்றி கார்த்திக்கேயன்.
நண்பர் பிரசன்னா
நலம் தானே?
இதை எழுத எனக்கு பத்து நிமிடம் ஆனது.
உங்கள் தளத்தின் பார்வையாளர்கள்,
பின்னூட்டம் இடுபவர் ,மற்றும் ஒட்டு போடுபவர்
எண்ணிக்கையை அதிகரிக்க
என் டேஷ்போர்டில் இருக்கும் அமீரக நண்பர்கள்
குழுவிற்கு அறிமுக பின்னூட்டம் இடவும்.
அதில் கலை (VADALOORAN)என்பவர் தான் எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்தார்.
உங்களுக்கும் இருப்பார்.
(நீங்கள் பிரபலங்கள் என தம்மை நினைக்கும் பதிவர்களுக்கு
பின்னூட்டமிட்டால் அதற்க்கு நன்றியாவது திரும்ப கிடைக்குமா என்றால்
சந்தேகமே.)
வாருங்கள் நாம் நட்புக்கரம் கொடுப்போம்.
நன்றாக எழுதுகிறீர்கள்
நண்பர்கள் ஊகம் இருந்தால் இன்னும் நன்கு எழுதலாம்.
அப்புறம் கண்ட திரட்டிகளையும் தூகிவிடுங்கள்.
உங்கள் பிளாக் திறக்க நேரமாகும்.
அறிவுரை தான் உலகில் இலவசமானது.
அனால் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
நன்றி.நன்றாய் எழுதுங்கள்.
நன்றி கார்த்திகேயன். உங்கள் பரிந்துரைப்படி உங்கள் நண்பர்களின் தளங்களில் பின்னூட்டம் இட்டுள்ளேன். எனக்காக நேரம் எடுத்துக் கொண்டு பின்னூட்டம் இட்டமைக்கும் மிக்க நன்றி...
Post a Comment