Thursday, July 2, 2009

In Bruges (2008) - குற்ற உணர்வும், இருத்தலின் வலியும்


ஃப்ரான்ஸ் காப்காவின் இரு சிறந்த சிறுகதைகளில் ஒன்று, In the Penal Colony. ஒரு கொலை இயந்திரம் பற்றி, மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிகவும் துல்லியமாக விவரிக்கப் பட்ட சிறுகதை. 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த இருத்தலியல் (Existentialism) படைப்பாக இந்த சிறுகதை அறியப் படுகிறது. என்னவோ தெரியவில்லை, இந்த திரைப்படத்தை பார்க்கும் போது, இந்த சிறுகதை என் நினைவுக்கு வரத் தவறவில்லை.

லண்டனில் வசிக்கும் இரு ஐரிஷ் அடியாட்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் தவறு செய்ய நேரிட, அதில் இருந்து தப்பிப்பதற்காக பெல்ஜியத்தில் உள்ள புருஷிற்கு(Bruges) தங்களை வேலைக்கு அமர்த்தியவரால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் ஒருவனுக்கு அங்கு வேலை காத்திருக்கிறது. இவர்கள் இருவரும் எதிர் கொள்ளும் உளவியல் ரீதியான ப்ரச்சனைகளும், அவர்களில் ஒருவன் தான் செய்த தவறினால் ஏற்படும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க இயல்வதும் தான், இந்த திரைப்படத்தின் கதை. டார்க் ஹீயுமர் என்று ஒரு வகை உண்டு. அதை மிகச் சிறப்பாக இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள்.

காலின் ஃபெரல் (Collin Ferrel) Phone Booth, Minority Report, Alexander போன்ற படங்களில் நடித்தவர். ப்ரெண்டன் க்ளீஸன் (Brendon Gleeson) Braveheart, Kingdom Of Heaven, Harry Potter திரைப்படங்களில் நடித்தவர். இவர்கள் இருவருமே அயர்லாந்தை சேர்ந்தவர்கள். அதனால் தான் என்னவோ, ஐரிஷ் அடியாட்களாகவே பொருந்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வேலைக்கு அமர்த்துபவராக ரால்ஃப் பியன்னஸ் (Ralph Fiennes), The English Patient, The Constant Gardner மற்றும் The Reader போன்ற படங்களில் நடித்தவர். மூவரும் இப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, கதாப்பாத்திர அமைப்புகள். தயாரிப்பு மேற்பார்வையாளர் போர்வையில் உலவும் போதை மருந்து விற்பவள், இவளுடன் சேர்ந்து சுற்றுலா பயணிகளை கொள்ளையடிக்கும் அவளின் முன்னாள் காதலன், கர்ப்பமாக இருக்கும் ஹோட்டல் வரவேற்பறை பெண், நிறவெறி பிடித்த குள்ள அமெரிக்க நடிகர் என்று வித்தியாசமான கதாபாத்திர அமைப்புகள். புரூஷ், ஐரோப்பிய நகரங்களிலே மிகவும் பழமையான நகரம், அதை அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் Eigil Bryld.

முழுதாக கதையை சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், இந்த பகுதியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். காரணம், இது தான் இந்த படத்தின் ஆதாரம். படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் எதற்காக புருஷ் வருகின்றனர் என்று சொல்லப் படுகிறது. ஒரு பாதிரியாரை கொல்லுகையில் காலின் ஃபெரல், ஒரு சிறுவனை தவறுதலாக கொலை செய்து விடுகிறார். அதனால் அவர் கொள்ளும் குற்ற உணர்வும், தன் உயிரை மாய்த்து கொள்ள துணிவதும், இந்த உலகில் தான் ஏன் இருக்க வேண்டும் என்று தனக்குள விவாதிப்பதும் ஒரு சிறந்த இலக்கிய படைப்பை வாசிப்பது போன்ற உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்த தவறாது. இதனால் தான் இந்த திரைப்படத்தை ப்ரான்ஸ் காஃப்காவின் படைப்போடு ஒப்பிடுகிறேன்.

படத்தின் இயக்குநர் மார்டின் மெக்டோனா (Martin McDonagh) இந்த படத்திற்காக, சிறந்த திரைக்கதை பிரிவில், ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ‘மில்க்’ தட்டிக் கொண்டு போய் விட்டது. ஆனால், காலின் ஃபெரல் இந்த படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதை வென்றார். இந்த படத்தைப் பார்த்த பின் உங்களுக்கு ஒரு முறையாவது புருஷிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாகத் தோன்றும். இந்த படத்தின் டயலாக்குகள் சோகமான தருணங்களிலும் உங்களை சிரிக்க வைக்கத் தவறாது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

Overweight Man: Been to the top of the tower?
Ray:(Collin Ferrel) Yeah... yeah, it's rubbish.
Overweight Man: It is? The guide book says it's a must see.
Ray: Well you lot ain't going up there.
Overweight Man: Pardon me? Why?
Ray: I mean, it's all winding stairs. I'm not being funny.
Overweight Man: What exactly are you trying to say?
Ray: What exactly am I trying to say? You's a bunch of fuckin' elephants.
[overweight man attempts to chase Ray around but quickly grows tired]
Ray: Come on, leave it fatty!
[the overweight women calm down the overweight man]
Overweight Woman #2: [to Ray] You know you're just the rudest man. The rudest man!
Ken:(Brendon Gleeson) [coming back from the tower] What's all that about?
[Ray shrugs]
Ken: They're not going up there.
[to overweight family]
Ken: Hey, guys. I wouldn't go up there. It's really narrow.
Overweight Woman #2: Screw you, motherfucker!
Ken: [to Ray] What was that about?


இண்டிபெண்டண்ட் வகைத் திரைப்படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் In Bruges. Guy Ritchie'ன் Lock, Stock and Two Smoking Barrels படத்தை ரசித்தீர்களானால் இந்த படம் உங்களுக்கு ஒரு திரைக் காவியமாகத் தோன்றும்.
இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக:


நண்பர்களே, நண்பிகளே. பதிவைப் படிச்சுட்டு அப்படியே போயிராதீங்க.
தமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10ன்னு உங்களுக்கு எது இலகுவா இருக்கோ,
அதுல ஓட்டு போடுங்க. மறக்காம பின்னூட்டம் போடுங்க. அடுத்த பதிவு எழுத
என்ன மாதிரி புதிய பதிவர்களுக்கு உபயோகப்படும். நன்றி.

15 comments:

SPIDEY said...

படத்தோட பின்னணி இசையப் பத்தி சொல்லாம விட்டீங்களே?. the music is also deserves praises ))

பிரசன்னா இராசன் said...

வருக ஸ்பைடி.
பிண்ணனி இசை கண்டிப்பாக படத்திற்கு ப்ளஸ் தான். ஆனால், என்னவோ, படத்தின் இறுதியில் தான் அதை நான் உணர்ந்தேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

ரொம்ப அருமையான படம்
அந்த சிறுவன் மண்டை பிளந்து சாகும்போது ஏற்படும் பரிதாபம்.
கண்டிப்பான ,நேர்மையான கொலை கார தலைவன் "ralph fiennes"
தான் சிறு வயதில் கண்டு களித்த இடம் இந்த "colin farrell" பிடிக்கும் என்று (cheap tour) சுற்றுலா அனுப்பி மகிழ்வித்து கொள்ள நினைப்பது.
சூப்பர் பெருசு "gleeson" தாம் ஆடிய ஆட்டத்தை தானே இவனும் ஆடுகிறான்,என்று இவனுக்கு செல்லம் கொடுப்பது.முதலாளியிடம் தூங்குகிறான் என பொய் சொல்லுவது என்று ஒரே அசத்தல்.
அந்த ஓட்டல் முதலாளி பெண் "ralph fiennes" போனில் அசிங்கமாக பேசியதை கோபத்துடன் இவனிடம் துண்டுசீட்டில் எழுதி கொடுப்பாளே.?
கடைசியில் அந்த குள்ளரை தவறுதலாக கொன்று விட்ட "ralph fiennes" தன்னை சுட்டுக் கொண்டு இறப்பது,என எதை விடுவது.
"gleeson" முதலாளியிடம் அவனை கொன்று விட்டேன் என பொய் சொல்வது.
இது ஒரு "extraordinary"திரைகாவியம்.very proffesionalism in each frame.
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் ஒப்பீடுகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன.
நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள்.
உங்களையும் என் பார்வையாளர் பகுதியில் சேர்த்துவிடுகிறேன்.
நிறைய எதிர்பார்கிறேன்.ரொம்ப அருமையான விமர்சனம் boss
தொடர்ந்து நட்புகரம் கொடுப்போம்.

பிரசன்னா இராசன் said...

கார்த்திகேயன். உங்களின் பின்னூட்டத்திற்கும், என் பதிவை தங்களின் பார்வையாளர் பகுதியில் இணைத்தமைக்கும் மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் நல்ல பதிவுகள் போட துணை புரிகிறது. மிக்க நன்றி.

Prakash said...

நேர்த்தியாக பதிவு போடாதீங்க. கொஞ்சம் எக்ஸ்ட்ரா மசாலா சேர்த்தால் படிக்க எதுவாக இருக்கும் :P. படத்த பார்த்துபுடுவோம் கண்டிப்பா:)

Anonymous said...

நண்பரே
காப்கா யாரென்றே தெரியாத வலி உலகிற்கு,அவரை வைத்து ஒப்பீடு எதற்கு?
எதற்கு வழ வழ ,கொழ கொழா?
நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள்.
போற வர்றவங்க எல்லாம் சொறிஞ்சு விடுவாங்க அதற்கு மயங்காதீங்க
பட்டு கத்தரித்தார்போல விஷயத்தை சொல்லுங்க
உதாரணத்திற்கு எவ்வளவு நகைச்சுவை காட்சி உண்டு படத்தில்?
ஆடை சொல்லாமல்?
சப் டைட்டிலே இருந்து ஆங்கில வசனத்தை காபி டி பூஸ்ட் அடித்தால் போதாது.
பல பேருக்கு புரியாது அய்யா.
தமிழ்ல சொல்லுங்க
எத்தனை பேரு உங்க மதிப்புறைய படிச்சிட்டு பொய் பார்ப்பான்?
எத்தனை பேருக்கு புரியும்.?
நல்ல சுவையா டைரக்டா விஷயத்திற்கு வாங்க..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
This comment has been removed by the author.
Krishna Prabhu said...

சினிமா என்றால் மிகவும் பிடிக்குமோ. உங்களுடைய 'கி.ரா' 'தக்கையின் மீது நான்கு கண்கள்' பதிவுகளைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி

http://www.thamizhstudio.com - இங்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு சில ஆவணப் படங்கள் கிடைப்பது உறுதி. மேலும் ஏதாவது கேட்க விருப்பினால் enathu.payanam@gmail.com க்கு தெரியப் படுத்தவும்

பிரசன்னா இராசன் said...

அன்பு அனானி,
உங்களால இந்த வலைமனை ரெம்ப பெருமை அடையுதுங்கோ. ஏன்னா இங்க வந்த முதல் அனானி நீங்க தான்.அனானிகள் பின்னூட்டம் போடுற அளவு என்னோட வலைமனை ஃபேமஸ் ஆகிடுச்சா.

சரி.மேட்டருக்கு வருவோம். நீங்க சொன்னா சரிதான் பாஸ். இனிமே மேட்டர கரீக்டா சொல்லி புடுவோம். அதே மாதிரி வசனத்தை கட், காப்பி, பேஸ்ட் பண்ணி போடுறதனால ஒன்னும் உபயோகம் இல்லங்கறதையும் ஒத்துக்குறேன்.

ஆனா, ப்ரான்ஸ் காஃப்காவை பத்தி ஒரு அறிமுகத்தைப் போட்டுட்டு தான் நான் அவரோட படைப்பைப் பத்தி சொன்னேன். ஏன்னா இந்த படத்தைப் பத்தி எனக்கு தோணுறதை தான் எழுத முடியும். இந்த படத்தைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடித்த படைப்பான அந்த சிறுகதையைப் படிச்ச உணர்வு வந்தது. அதனால தான் அதைப் பத்தி சொன்னேன்.

நாம எவ்வளவோ தேவை இல்லாத குப்பையை எல்லாம் வாங்கி மண்டையில ஏத்திப்போம். ஒரு உருப்படியான தகவலை உள்ள வாங்கிக்க மாட்டோம். எப்படியோ அனானி, உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. அடுத்த வாட்டி பின்னூட்டம் போடும் போது உங்க பேரு போட்டு போடுங்க. அப்படி என்ன தான் எழுதுறீங்கன்றதைத் தான் பார்ப்போமே.

பிரசன்னா இராசன் said...

வருக கிருஷ்ண பிரபு,
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. தமிழ் ஸ்டுடியோ வலைமனைக்கு சென்றுள்ளேன்.இருப்பினும் தகவலுக்கு நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஜீவா ஓவியக்கூடம் said...

தெளிவான விமர்சனம்.
படத்தை தேடிப்பிடித்து பார்த்துவிட தூண்டுகிறது!

ஜீவா ஓவியக்கூடம் said...

www.thamizhstudio.com
தளத்தில் நான் எழுதிய சில உலகப்படங்களின் அறிமுகம் இருக்கின்றன.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

நண்பர் பிரசன்னா உங்களுக்கு
பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.
உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
என்பதை தெரிவிக்கவும்.

பிரசன்னா இராசன் said...

அன்பு கார்த்திகேயன்,
மிக்க நன்றி. அப்படியாவது ஒரு நாலு பேரு படிப்பாங்க. விருது கொடுத்தீர்களானால் தன்யன் ஆவேன். :D

Share