Wednesday, April 8, 2009

தனக்கு தானே ஆப்பு வைப்பது எப்படி - விளக்குகிறார் கேப்டன்!!

ஷப்பா!! தேர்தல் வந்தாலும் வந்தது, நம்ம மொக்கை மாயாண்டி மாமாவை விட நம்மாளுங்க அறிக்கைன்ற பேர்ல கெட்ட மொக்கைய போடுறாங்க. 'சும்மா இருக்குற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி' - அந்த கதையா நம்ம கேப்டன் தனக்கு பப்ளிசிட்டி வர்றதுக்காக எதையோ சொல்ல, அது அவருக்கே ஆப்பு ஆகி போச்சு.


'எனக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேருவதற்காக கோடிகள் கொடுக்க முன் வந்தன' அப்பிடின்னு நம்ம கேப்டன் ஒரு ஸ்டண்ட் போட்டு இருக்கார் (அது தான் அவருக்கு கை வந்த கலை ஆச்சே... ஹிஹி). அத கேட்டு நம்ம தேர்தல் கமிஷன் உஷார் ஆகிருச்சு. 'விஜயகாந்த் மீதும், அவர் கட்சி மீதும் எந்த அரசியல் கட்சி வேண்டுமானாலும் புகார் குடுக்கலாம்' அப்பிடின்னு தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் சொல்லி இருக்காருங்கோ.

ஆனாலும் கேப்டன் உண்மையிலே பாவமுங்க. பின்னே ஒரு மனுஷனுக்கு மாத்தி, மாத்தி பல ரூபங்கள்ல ரிவீட் வந்தா என்ன தான் பண்ண முடியும். இதெல்லாம் பத்தாதுன்னு அவரு கட்சிகாரர் ஒருத்தருக்கு இன்னொரு பிரச்சனை.
அது யாருன்னு பார்த்தா நம்ம மா பா பாண்டியராஜன். இந்தியாவில் மிகப் பெரும் வேலைவாய்ப்பு நிறுவனமான மா பா'வை நிறுவியவர். அது மட்டுமல்ல, நல்ல இலக்கிய ஆர்வலர். பல சேவை நிறுவங்கள் நடத்தி வருகிறார். அந்த சேவை நிறுவனகள் மூலம் ஆரம்பித்தது தான் சிக்கலே.



அவருடைய சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் சில உதவிகள் செய்யப் போக, அது தேர்தல் கமிஷன் காதுக்கும் , மூக்குக்கும் எட்ட அவருக்கு அதுவே ஆப்பாகி இருக்கிறது. தேர்தல்னு வந்தா எல்லாரும் 'உண்மையான' அரசியல்வாதி ஆயிடராங்கப்பு. ஜெ. கே. ரித்தீஷுக்கு எல்லாம் பாண்டியராஜன் நூறு மடங்கு தேவலாம். இது மாதிரி சீப்பான பப்ளிசிட்டி பண்ணாம, கொஞ்சம் நேக்கா கேப்டனும் அவரோட கட்சிக்காரங்களும் வேலை பார்த்தாங்கனா நடுநிலையாளர்கள் ஒட்டு அத்தனியும் அவருக்குதேன்.

இந்த தேர்தலில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்களில் எனக்கு பிடித்த வேட்பாளர் மா பா பாண்டியராஜன் தான். பார்க்கலாம் வை. கோ வை ஜெயிக்கிறாரா இல்லையானு??!! கேப்டனோட படம் சும்மா நக்கலுக்கு தானுங்கோ. கேப்டன் ஆர்வலர்கள் காண்டு ஆகாதீங்கோ.

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

4 comments:

Viji Sundararajan said...

pavvam captain !! mmmm

தேவன் மாயம் said...

எனக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேருவதற்காக கோடிகள் கொடுக்க முன் வந்தன' அப்பிடின்னு நம்ம கேப்டன் ஒரு ஸ்டண்ட் போட்டு இருக்கார் (அது தான் அவருக்கு கை வந்த கலை ஆச்சே... ஹிஹி). அத கேட்டு நம்ம தேர்தல் கமிஷன் உஷார் ஆகிருச்சு. 'விஜயகாந்த் மீதும், அவர் கட்சி மீதும் எந்த அரசியல் கட்சி வேண்டுமானாலும் புகார் குடுக்கலாம்' அப்பிடின்னு தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் சொல்லி இருக்காருங்கோ////

வி.காந்த் புதியவர்தானே!
புரியாமல் பேசுகிறார்!

வால்பொண்ணு said...

அரசியல் மட்டும் தானா ...

Prasanna Rajan said...

@Thevanmayam

கேப்டன் ஒன்னும் புதுசு இல்லேங்கோ. அவரு தான் ஏற்கனவே ஒரு சட்டமன்ற தேர்தலை பார்துட்டாரே. இன்னும் அரசியல் முதிர்ச்சி அவருக்கு வரலைங்களே...

Share