அது என்னமோ தெரியலீங்க. அப்பா கூட ஊர் சுத்தறது'னா அப்பிடி ஒரு குஷி. அதுவும் அப்பாவோட சுசுகி மாக்ஸ் 100 பைக்'ல அப்பா ஓட்ட, நான் பின்னாடி உக்காந்து போறது தனி சந்தோசம் (இப்ப அத வித்தாச்சு :( ). இந்தியா போயிருந்தப்போ அம்மா நச்சரிப்பு தாங்காம குல தெய்வம் கோவிலுக்கு நானும் அப்பாவும் கெளம்புனோம். அப்பிடி போயிட்டு திரும்பி வரப்ப "குரங்கணி போகலாமானு" அப்பா கேட்டாரு.
நான் மாட்டேனு சொல்லுவேனா. வுடு ஜூட். போடிநாயக்கனூர்'ல (தேனி மாவாட்டம்) இருந்து 15 கல்லு தொலைவுல இருக்குதுங்க நம்ம குரங்கணி. போடியில இருந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்துல 'முந்தல்'னு ஒரு கிராமம் இருக்கு. அங்க ரெண்டு ரோடு பிரியும். பீச்சாங்கை பக்கமா போனீங்கன்னா 'மூனாறு'. சோத்துக்கை பக்கமா போனா நம்ம 'குரங்கணி'.நீங்க ஊட்டி, கொடைக்கானல்' ஒரு வாரம் சுத்தி பார்குறதும் ஒரு மத்யான நேரம் இங்க பைக்'ஐ எடுத்துட்டு சுத்துறதும் ஒண்ணுனு சொல்லுவேன். அப்பிடி ஒரு அருமையான இடமுங்கோ.
இந்த ஊருல இருக்குற ஸ்கூல்'ல தான் எங்க தாத்தா வாத்தியாரா வேலை பார்த்து இருக்கார். ச்பைசெஸ் டூரிசம் போர்டு கண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்த இடம் தெரிஞ்சதுனால ரோடு பக்காவா போட்டு இருக்காங்கோ. பசங்களோட காம்பிங் போறதுக்கு சரியான இடமும் கூட.
போடியில இருந்து குரங்கணி போற ரோடு தான் மெயின் அட்ராக்ஷன். அங்க அங்க பைக்'ஐ நிறுத்தி போட்டோ எடுத்துக்கோங்கோ. குரங்கணி'ல வண்டிய நிறுத்திட்டு ஒரு பத்து கிலோமீட்டர் நடந்தீங்கன்னா, டாப் ஸ்டேஷன்'நு ஒரு எடம் வருமுங்கோ. ஐம்பதுகள்'ல இந்த இடத்தில இருந்து மூனாருக்கு (கேரளா) கேபிள் கார் வசதி இருந்தது. அது மூலமா குரங்கணி சுத்தி உள்ள ஊர்கள்ல வளர்ற ஏலக்காய்'ய அனுப்பிகிட்டு இருந்தாங்க.
அதுக்கு அப்புறம் அது அவ்வளவா லாபகரமா இல்லாததுனால விவசாயிங்க அதை என்னமோ அவ்வளவா உபயோகிக்கல. குரங்கநியில இருந்து ஒரு ரெண்டு கல்லு டாப் ஸ்டேஷனுக்கு பைக்'ல போகலாம். அதுக்கு மேல நடந்து தான் போகணும். மேல ஏறுறதுக்கு முன்னாடி சில பல வடைகள், டீயை உள்ள தள்ளிக்கிட்டு போங்க, இல்லாட்டி பசியில நுரை தள்ளிகிட்டு தான் கீழ இறங்குவீங்க. (அங்க இருக்குற ஒரு கடையில சூடா 'கொழுக்கு மலை' டீ போடுவாங்க).
பெரும்பாலும் மூனார் போயிட்டு வரவங்க வர வழியில இங்க வந்துட்டு போறாங்க. ரெம்பவே சிம்பிள்'ஆன பிக்னிக் ஸ்பாட். ஆனா தங்குற வசதி எல்லாம் கெடயாது. சாப்பாடு சாப்பிடனும்'னா போடிக்கு தான் வரணும். மத்தபடி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பைக் அல்லது கார்'ல ஒரு சவாரி போக பக்காவான இடமுங்கோ.
'
அப்புறம் ஒரு முக்கியமான விஷயமுங்கோ. நீங்க பார்க்குற அம்புட்டு போட்டோவையும் எடுத்தது நாந்தேன்.
4 comments:
There is also a Kurangani in Thoothukudi district near srivaikundam, eral, kurumbur.
Kurangani Muthumalai amman temple is very famous.
இந்த இடத்தை பாக்கிற பாக்கியம் இன்னும் கிட்டலை ...
supera iruku
Post a Comment