Sunday, April 4, 2010

தமிழ்மணம் நட்சத்திர வாரம்


இந்த வாரம்... நட்சத்திர வாரம்னு பெரிய பீடிகையோடு ஆரம்பிக்க ஆசை தான். ஆனாலும் அடக்கி வாசி என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்கிறது. இருந்தாலும் ரெம்பவே அடக்கமா இருந்துட்டேன். அதனால தான் பாருங்க, இந்த நட்சத்திர வாரத்தில் அறிமுகம் போட்டவுடனே, 'யார்ரா அது, இவனையெல்லாம் நட்சத்திரமா போட்டது. எங்கிட்டு இருந்து புடிச்சாயங்க இவனை' என்று  பல குரல்கள் எழுந்து இருக்கும்.

பதிவு ஆரம்பித்த புதிதில் நீண்ட காலம் எழுதும் பதிவர்கள், பிரபல பதிவர்கள் எழுதும் பதிவுகளை பார்க்கும் போது மிரட்சி தான் மிஞ்சும். சரி நாமும் எதாவது எழுதுவோமே, என்று எழுதினால் ஒருவரும் வந்து எட்டி பார்க்க மாட்டார்கள். ஓட்டு எல்லாம் பல பதிவுகளுக்கு சுத்தமாக விழுந்ததே கிடையாது. ஒரு சிலர் எல்லாம் அவர்களின் பதிவிற்கு 40 , 50 என ஓட்டுகள் வாங்கிக் கொண்டு இருக்க, என்னுடைய பதிவுகள் 15 வோட்டு வாங்குவதே ஒரு பெரிய ரெகார்ட் (15 வோட்டுகள் - பாலு மகேந்திரா கதை நேரம்). என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமையான வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வாரை பற்றி எழுதிய போது ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை.


இந்த வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஓடி விட்டது. என் அறிமுகத்தில் கூறியது போல் சென்ற வருடம் ஒரு 25 பதிவுகள் தான் எழுதி இருப்பேன். அதில் எனக்கு பிடித்த பதிவுகள் என்றால் ஒரு மூன்று பதிவுகள் மட்டுமே தேறும். கி.ராவைப் பற்றி நான் எழுதிய பதிவு, தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படம் பற்றிய பதிவு மற்றும் 'ஏன் தமிழ் சினிமா இன்னும் உலக ரசிகர்களை சென்றடையவில்லை' என்ற பதிவு. மற்றவை அவ்வப்போது போகிற போக்கில் எழுதியவை என்றாலும் என் அளவில் சிறப்பானவை தான். அதிக வரவேற்பில்லாததற்கு காரணம், மற்ற பதிவர்கள் பதிவுகளை பிரபலமாக்க கூறப்பட்ட வழிமுறைகளை நான் கிஞ்சித்தும் மேற்கொள்ளவில்லை. 

சொந்த பிரச்சனைகள், என்னுடைய ஆராய்ச்சி சார்ந்த கடுப்புகள், வேலை கிடைக்குமா என்ற கேள்விக்குறிகள் இவையெல்லாம் சேர்ந்து அழுத்தும் நிலையில் வந்து உள்ளது இந்த நட்சத்திர வார அழைப்பு. பத்தாதிற்கு சமீபத்தில் ஏற்பட்ட பணமுடை காரணமாக கையில் இருந்த லேப்டாப்பை நண்பன் ஒருவன் நல்ல விலைக்கு கேட்க விற்று விட்டேன். நானோ என் எழுத்தோ இன்னும் முதிர்ச்சி அடையாத ஒரு நிலையில், என்னை விட பிரபல பதிவர்கள் மற்றும் அதிகமாக படிக்கப் பெறும் பதிவர்கள் இருக்க எந்த அடிப்படையில் நான் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப் பட்டேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமே என்ற நப்பாசை வேறு. ரெம்ப காலமாக ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றி கொண்டிருக்கிறாயே என்று வேறு நண்பன் ஒருவன் கேட்டு விட்டான்.

பின்னூட்டங்களுக்கும், ஒட்டுகளுக்கும் ஏங்க ஆரம்பித்தால் ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று எனக்கு கை வந்தவற்றை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன். நட்சத்திர அறிமுகத்தில் என்னுடைய  வாழ்வின் முக்கியமான ஒரு நான்கு ஆண்டுகளை பற்றி குறிப்பிட மறந்து விட்டேன். சிறு வயதில் இருந்து வாசிப்பு பழக்கம் இருந்தாலும், ஏதோ இந்த வலைப்பதிவை எழுதும் அளவு சிறிதளவு மொழியறிவு ஏற்பட்டது பொறியியல் படித்த அந்த நான்கு ஆண்டுகள் தான். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இருந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியில் (தற்சமயம் அண்னா பல்கலைகழகம், திருச்சி) தான் 2002-2006 வரை இளங்கலை உயிரிதொழில்நுட்பவியல் (Biotechnology) படித்தேன். பல்கலைகழக நூலகம் தான் பல நேரங்களில் எனக்கான வாசஸ்தலமாக இருந்தது. பெரும்பாலும் தமிழ்த்துறை மாணவர்கள் அதிகம் உபயோகிக்காத புத்தம் புதிய புத்தகங்கள் அங்கு இருக்கும்.  அந்த புத்தகங்கள் தான் அப்போதைய இலக்கிய பசியை தீர்த்தன.

பாடத்தை படித்தேனோ இல்லையோ, (ஆனா அரியர் வைக்காத அரை மனிதன் நான்) புத்தகங்கள் தான் நானே விரும்பி ஏற்படுத்தி கொண்ட தனிமையை விலக்கின. என்னடா நெம்ப ஓவரா இலக்கியவாதி மாதிரி பேசுறானேன்னு கடுப்பாவாதீங்க. மைக் கிடைச்சிருக்கு இல்ல, பேசி தானே ஆவனும். இந்த சமயத்தில் நான் எழுத ஆரம்பித்த புதிதில் என்னை ’ஊக்கு’வித்து  பின்னூட்டம் போட்டு, ஓட்டு போட்ட சக வலைப்பதிவாளர்கள் கார்த்திகேயன், திருவாளர் ஹாலிவுட் பாலா, நண்பன் ப்ரகாஷ், கேபிளார், சென்ஷி, கனவுகளின் காதலன்  மற்றும் பதிவுகளை படித்த, பின்னூட்டமிட்ட அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்ள கடமைபட்டுள்ளேன்.

சிக்கிருச்சு சிறுத்தை. மக்கா ஒரு கை பாத்திருவோம்... (நல்லாத் தானடா இருந்த??!!)

46 comments:

சென்ஷி said...

:)

வெல்கம் மாம்ஸ்..

இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்.. நாளையிலேந்துதான் உங்க பதிவு தமிழ்மண முகப்புல வரும். திங்கள் முதல் அதனால இந்தப் பதிவை நாளைக்கு போட முடியுமா. ப்ளீஸ்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்..

கண்ணா.. said...

அட்வான்ஸ் தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள்.

பிரசன்னா இராசன் said...

நாளைக்கு போட நேரம் கிடைக்காததால் தான் இன்னைக்கு பதிவு போடுறேன் சென்ஷி... எப்படியும் பதிவோடையில வரத்தானே போகுது...

பிரசன்னா இராசன் said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார்...

பிரசன்னா இராசன் said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கண்ணா...

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... ஓட்டு போடணும் அப்படின்னா நீங்க இந்த இடுகையை தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் சேர்த்து இருக்கணும் அண்ணே... இன்னும் சேர்க்கவில்லை

இராகவன் நைஜிரியா said...

// பிரசன்னா இராசன் said...
நாளைக்கு போட நேரம் கிடைக்காததால் தான் இன்னைக்கு பதிவு போடுறேன் சென்ஷி... எப்படியும் பதிவோடையில வரத்தானே போகுது...//

அண்ணே ஷெட்யூல் நாளை தேதி போட்டு வச்சுருங்க அண்ணே. அப்படி போட்டீங்கன்னா என்றைய தேதி அது வருணுமோ அன்று வரும்.

புது இடுகை எழுதும் போது, கடைசியில் Post Options என்று இருக்கும். அதில் Post Date and Time இருக்கும். அதில் எந்த தேதி, நேரம் கொடுத்து, பப்ளிஷ் பட்டனை அமுக்கிட்டீங்கன்னா, ஆட்டோமேடிக்கா அந்த தேதி அன்று பப்ளிஷ் ஆயிடும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பர் பிரசன்னா இராஜன்
வாழ்த்துக்கள்.என்னங்க நோட்புக்கை போய் வித்துட்டீங்க,அவ்வளவு பணமுடையா?சீக்கிரமே நல்ல மதிப்பெண்களுடன் ,தேறி மனதுக்கு பிடித்த வேலை நிறைய சம்பளத்துடன் கிடைத்து மாக் நோட் புக் வாங்க வாழ்த்துக்கள்:))எப்படி எல்லாத்தையும் கவர் பண்ணிட்டோம்ல?

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

என் மனதார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் உள்ளே இருக்கும் கனல் மட்டுமே உங்களை தொடர்ந்து எழுதச் செய்யும், புறக்காரணிகள் அல்ல :) நீங்கள் விரும்பும் அனைத்திலும் உயரங்கள் தொட வாழ்த்துக்கிறேன்.

பிரசன்னா இராசன் said...

மிக்க நன்றி இராகவன் சார். மன்னிச்சுக்குங்க, உங்க பேரை லிஸ்ட்ல சேர்க்கலை. தமிழிஷில் நாளைக்கு இணைக்கலாம் என்றிருந்தேன். அதே சமயம் தமிழ்மண ஓட்டு பட்டை, ஏனோ தெரியவில்லை HTML Code-ஐ பல முறை மாற்றியமைத்தும் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

அடுத்த முறை கண்டிப்பாக செய்கிறேன் இராகவன் சார்...

பிரசன்னா இராசன் said...

நன்றி கார்த்திகேயன். என் சூழல் அப்படி, அதனால் தான் விற்று விட்டேன். ஒரு புதிய நெட்புக் ஒன்றை வாங்கி விட்டேன். அது இன்னும் ஆர்டரில் இருக்கிறது. விரைவில் உபுண்டு இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டும். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி கார்த்திகேயன்...

பிரசன்னா இராசன் said...

உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு என அறிவேன் கனவுகளின் காதலரே. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

Cable Sankar said...

வாழ்த்துக்கள்

பிரசன்னா இராசன் said...

நன்றி கேபிளாரே...

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

பிரசன்னா இராசன் said...

நன்றி கோவி.கண்ணன்...

ஈரோடு கதிர் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

ஜாக்கி சேகர் said...

வாழ்த்துக்கள் பிரசன்னா...

பிரசன்னா இராசன் said...

நன்றி ஈரோடு கதிர் மற்றும் ஜாக்கி சேகர் அவர்களே...

பிரசன்னா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பிரசன்னா இராசன் :)

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே வாழ்த்துகள்

இன்னிக்கி தான் உங்க பதிவை பார்க்கிறேன்.

பைத்தியக்காரன் said...

நட்சத்திர வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பிரசன்னா இராசன் said...

நன்றி பிரசன்னா மற்றும் மஞ்சூர் ராசா...

ஆயில்யன் said...

இனிய நட்சத்திர வாழ்த்துக்கள் :))

இருமேனிமுபாரக் said...

தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு என் நல் வாழ்த்துக்கள் பிரஸன்னா..இந்த அங்கீகாரம் தங்களை மென்மேலும் மெருகுடன் எழுதத் தூண்டட்டும். மற்றவர்களையும் உங்களால் முடிந்தவரை ஊக்கப் படுத்துங்கள்.
அன்புடன்...

சுல்தான் said...

நட்சத்திர வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்..

ஜோதிஜி said...

அறிமுகம் அசத்தல். ஆனால் கேட்டுள்ள கேள்விகள் உங்களை உண்மைக்கு அருகே நின்று பார்க்க வைத்துள்ளது.

வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள்! :-)

தருமி said...

நட்சத்திரமாய்ட்டீங்கல்லா ... இனிம பாருங்க ... பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லக் கூட நேரம் இருக்காது!

வாழ்த்துக்கள்

வினையூக்கி said...

வாழ்த்துகள் நண்பா !!

நாஞ்சில் பிரதாப் said...

வாழ்த்துக்கள் தல....
ஒரு அடிமை சிக்கிருச்சிருடோய்...கலக்குங்க தல பின்னுட்டம், ஓட்டு மழை பொழிஞ்சிற மாட்டோம்...

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா.

தமிழன்-கறுப்பி... said...

ரசனையான பகிர்வுகளுக்குரிய வாரம்.

:)

நன்றி.

பிரசன்னா இராசன் said...

@ சிவராமன், ஆயில்யன்

நன்றி

@ இருமேனிமுபாரக்

கண்டிப்பாக நண்பரே...

@ சுல்தான், அன்புடன் அருணா

நன்றி

@ ஜோதிஜி

மிக்க நன்றி...

@ சந்தனமுல்லை

நன்றி

@ தருமி

உண்மை தான் சார். இப்பவே பின்னூட்டம் போடுறதுக்கு கண்ணைக் கட்டுது. எப்பிடித் தான் சமாளிக்கிறீங்களோ. Anyway I am enjoying the extra attention... :D

@ வினையூக்கி

நன்றி நண்பரே...

பிரசன்னா இராசன் said...

@ நாஞ்சில் பிரதாப்

ரைட்டு... ஒன்னும் சொல்றதுகில்லை. எப்படியோ நன்றி நண்பரே

@ சரவணக்குமார்

வாங்க நண்பரே. நல்லா இருக்கீங்களா? ஊரெல்லாம் நல்லா இருக்கா? உங்க நண்பர் நலமா இருக்காரா? வருகைக்கு மிக்க நன்றி...

@ தமிழன் - கறுப்பி

மிக்க நன்றி...

LK said...

vaalthukkal

பிரசன்னா இராசன் said...

nandri LK

துளசி கோபால் said...

நல்வரவு.

எப்படியோ நம்மூர்க்காரரா ஆகிட்டீங்க. ஒண்ணுமண்ணா இருக்கணுமுல்லெ!

நட்சத்திர வாழ்த்து(க்)கள் மக்கா

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பிரசன்னா!

பிரசன்னா இராசன் said...

@ துளசி கோபால், வெயிலான்

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திர வாரத்தில் நல்ல பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். நட்சத்திர வாழ்த்துகள்.

Prakash said...

வாழ்த்துகள் பிரசன்னா :)

Prasanna Rajan said...

@ வல்லிசிம்ஹன்

நன்றி

@ ப்ரகாஷ்

மச்சி ஒரு வழியா வந்தியே. நன்றி...

Share