1957 - ஆம் ஆண்டு பிறந்த கஸ்மேன், தொழில் பழகியது ’மிகுவெல் ஏஞ்சல் ஃபெலிக்ஸ் கெலார்டோ’விடம். ’தி காட்ஃபாதர்’ என்று அழைக்கப்பட்ட கெலார்டோ 80களில் மெக்ஸிகோ போதை மருந்து சந்தையின் ஜாம்பவனாகத் திகழ்ந்தான். 1989ஆம் ஆண்டு பிடிபட்ட கெலார்டோ, சிறையில் இருந்த போதும், தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தை நடத்தி இருக்கிறான். கெலார்டோ காலால் இட்ட பணியை தலையால் செய்து கொண்டு இருந்தான் கஸ்மேன். (ஒரு உவமைக்கு சொல்றேன். கண்டுக்காதீங்க). 90களின் ஆரம்பத்தில் கெலார்டோ அதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு மாற்றப் பட்டவுடன் தன் ராஜாங்கத்தை நடத்த ஆரம்பித்தான். அதன் பெயர் தான் ‘சினலோவா கார்டல்’ (Sinaloa Cartel).
கஸ்மேன் சரக்கைக் கடத்தும் விதமே வித்தியாசமானது. மெக்ஸிகோ -அமெரிக்க எல்லையில் அமைந்து இருக்கும் மலைக் குகைகளைக் குடைந்து அந்த டன்னல்கள் வழியாக கடத்துவான். இந்த ஆண்டு வெளி வந்த ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படம் பார்த்தீர்களா. இவனுடைய இந்த உத்தியை தான் உபயோகித்து இருந்தனர்.
1993ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த கஸ்மேனை, அவனுடைய எதிர் கும்பலான ’டிஜூவானா கார்டல்’ சுட்டு தள்ள ஆரம்பித்தனர். ஆனால் அப்போது கஸ்மேனுக்கு பதில் உயிர் இழந்தது, மெக்ஸிகோ மக்களால் நேசிக்கப்பட்ட கார்டினல் ‘ஜான் ஜெஸுஸ் போஸ்டாஸ் - ஒகாம்போ’.
1993 மே மாதம் அவனுடைய 7.3 டன் கொகைன் கடத்தல் முறியடிக்கப்பட்ட மறு மாதம், மெக்ஸிகோவில் கைது செய்யப் பட்டான். அவனுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப் பட்டது. 2001ஆம் ஆண்டு அவன் மேல் அமெரிக்காவில் உள்ள வழக்குகள் பற்றி விசாரிப்பதற்காக அதிக பாதுகாப்பு உள்ள மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ சிறையில் இருந்து மாற்றப்படும் போது தப்பினான். அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்...
6 comments:
நன்றாக இருக்கிறது , தொடரவும் , நன்றி
உங்கள் வருகைக்கு நன்றி. மதி.
//அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்..//
:-))
வேற வழி.. காத்திருக்கிறோம். சீக்கிரம் பதிவேத்துங்கள்!
@ சென்ஷி
அட ஏன் பாஸ் சலிச்சுக்குறீங்க. இன்னும் ரெண்டு நாள்ல பதிவேத்துறேன்.
mapla.. good work da.. it has been soo long since i ve written anything in tamil.. and i think i stopped reading tamil for 2 years.. appo appo un blog vanthu tamil varthai ellam padikrathuku nalla iruku.. thanks..
medlin cartel ஐ விட பெரிய இயக்கமா? ச்சீ கும்பலா? ? :O
Post a Comment