Sunday, May 24, 2009

'சர்வம்' - பட்டையைக் கிளப்பும் இளையராஜாவின் பிண்ணனி இசை

பழச தூசி தட்டி உபயோகிப்பதில் தான் கோலிவுட்காரர்களுக்கு என்ன ஒரு ஆனந்தம். முதலில் ரீமிக்ஸ் என்று ஆரம்பித்தார்கள். அப்புறம் பழைய பாட்டை அப்பிடியே உபயோகிக்க ஆரம்பித்தார்கள். 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் வரும் 'சிறு பொன்மணி அசையும்' பாடலை கவித்துவமாக காட்சிகளுக்கு நடுவே புகுத்தியிருந்தார் சசிகுமார். அதே போல் சமீபத்தில் வெளியான 'பசங்க' திரைப்படத்தில் கூட ரிங்டோனாக வரும் 'மேஸ்ட்ரோ'வின் பாடல்.


இப்போது 'சர்வம்'. ஆனா சும்மா சொல்ல கூடாது. அப்பவே இன்னாமா கம்போஸ் பண்ணியிருக்காருப்பா ராஜா. ஆர்யா, த்ரிஷாவை பார்குரப்ப எல்லாம் வயலின் ஹை பிட்சில அதிருது. அது இன்னா பாட்டுன்னு ரெம்ப நேரம் மண்டையை பிச்சப்புறம் தான் தெரிஞ்சது. 'வாழ்க்கை' படத்துல நம்ம அக்கா 'சில்க்' ஆடுன 'மெல்ல மெல்ல என்னை தொட்டு' பாட்டு. அது என்னமோ படத்தோட முதல் பாதி முழுசும் இந்த பாட்டோட பி.ஜி.எம் தான் ஒடுது.

அந்த பாட்டை இங்க பாருங்க:


என்னது படத்துக்கு மீசிக் 'யுவன் ஷங்கர் ராஜாவா'!! சொல்லவே இல்லை...

13 comments:

G.Ragavan said...

மெல்ல மெல்ல பாட்டு பி.சுசீலா பாடுனது. கலக்கல் பாட்டு. கோடு போட்ட மாதிரி பாட்டு... ஆனா கேக்கும் போது ஒடம்பு லேசா துள்ளுறாப்புல இருக்கும். இளையராஜா... இசைராஜாதான்.

Prasanna Rajan said...

இன்னும் கொஞ்ச நாளுக்கு இந்த பி.ஜி.எம் தான் நிறைய பேரோட செல் ரிங் டோன். என்னோட ரிங் டோனும் இது தான். வருகைக்கு நன்றி G.Ragavan

Suddi said...

"Mella Mella ENnai thottu" song
came in a movie called Vaazhkai.
Sivaji Ganesan, Ambika-hero, heroine. Ravindar their son.

Song written by M. G. Vallaban.

Except Ilayaraja and Silk, nobody came up in life.. Ravindar is a very good dancer, but could not survive much in the field.

Silk's sad story, we all know. She
was used by every tom, dick and harry, finally committed suicide.

Still, I remember the days of going to Motcham theatre in purasawalkam area in my school days, to see her bit mallu movies.

This movie ran, only for this song more or less. Sivaji will come with a big wig and big belly.. Ambika, paavam..

Maestro's violin prowess came out fully in this song.

There is one more classic hit in this movie.. "Kaalam maralam, nam kadal maruma?."

During my school days, way back in 1990's, I used to go to stage performances of Lakshman suruthi and other likes (famous during that time)..

Every troup tried this song.. But in my viewpoint, Maestro could not be xeroxed..

The perfection of violin, guitar, drums and keyboard - all were in sync...

Now, we are using the songs of 1980's and 1990's.. How about after 10 years?. Songs of 2000 will be used?. I dont think so...

Even now, old songs of MSV, KVM, TMS, Suseela amma stands one step on top.

Though we have quite a lot of music directors, it's more fast food..

As Isai Gyani rightly said in a Dubai concert, people should not expect instant food.. Only banana leaf based home made food is what he can do...

Raja, Raja than.

Sudharsan

Unknown said...

நண்பா,

ராஜாவுக்கு புச்சா நீங்க.கேளுங்க கேளுங்க அவர கேட்டுகிட்டே இருங்க.

சுஜாதா ராஜாவைப் பற்றி சொன்னது:-

பாட்டில் எந்த இடத்தை தொட்டாலும் எதிர்பார்க்காத ஆச்சரியம் இருக்கும். முக்கியமா புத்திசாலித்தனம் இருக்கும்.

அவரு ஒரு சகாப்தம் நண்பா.திரை இசையின் இருக்கும் எல்லா பரிமாணங்களையும்
“ஒரு காட்டு காட்டிட்டார்”.

இப்ப இருக்கிறதெல்லாம் ஒண்ணுமே இல்ல.

ஹாரிஸ் ஜெயராஜ் லேட்டஸ்ட்டா ராஜாவின் கிடார் பீஸை
சுட்டுட்டார். படம்:அயன் பாட்டு:நெஞ்சே...நெஞ்சே...

ராஜா படம்:இதயத்தை திருடாதே
பாட்டு: விடிய விடிய நடனம்
http://www.dishant.com/album/Idhayathai-Thirudathe.html

(அதில் வரும் prelude கிடார் இசை)

வாழ்க்கை பாட்டு மாதிரியே பட்டையைக் கிளப்பும் பாட்டுக்கள்:

பாட்டு “Nethu Oruthara Oruthara Pathom” படம்: Puthu Paatu
Drumsல ஒரு குமுறு குமுறுன்னு குமுறுவாரு.

http://www.youtube.com/watch?v=xZWay1Y-1Yc


பாட்டு: என்ன சுகமான உலகம்” படம்:கர்ஜனை

http://www.thiraipaadal.com/albums/ALBIRR00165.html

Raja went full blast in one place.
Listen friend!


G.Ragavan:

சார்! நான் சொல்றது கரெட்டுதானே?
சொல்லுங்க.

lngkitcha said...

உங்களுடைய கி.ரா-வைப்பற்றிய பதிவினையும், கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் பதிவினையும் படித்தேன். நன்றாக இருந்தது. கிராவின் மேல் காதல் கொண்டவர்களில் நானும் ஒருவன். அவருடைய பிற படைப்புகளையும் படித்து பதிவிடுங்கள். பிஞ்சுகள் அருமையான விவரிப்புடன் கூடிய குழந்தைகள் நாவல். anyindian.com -ல் கிடைக்கிறது.

G.Ragavan said...

// பாட்டு: என்ன சுகமான உலகம்” படம்:கர்ஜனை

http://www.thiraipaadal.com/albums/ALBIRR00165.html

Raja went full blast in one place.
Listen friend!


G.Ragavan:

சார்! நான் சொல்றது கரெட்டுதானே?
சொல்லுங்க. //

கர்ஜனை படத்துல என்ன சுகமான உலகம் பாட்டு நல்லாருக்கும். ஆனா எனக்கு "குத்தும் ஊசி வலிக்கும்" பாட்டு பிடிக்கும். ஒரு மாதிரி வித்யாசமா இருக்கும்.

இளையராஜாவின் பாடல்கள் பல மனதிருக்கும் அமைதியும் இன்பமும் தரும் மருந்தாக இருக்கின்றன என்பதே உண்மை. மெல்லிசை மன்னர், இசைஞானி பாட்டுகளைக் கேட்காதே என்று சொல்லி விட்டால் எனக்குக் கேட்பதற்கு வேறு பாட்டு கிடைக்குமா என்று தெரியாது.

Unknown said...

நன்றி ராகவன்.

Unknown said...

ஒளியுடையோன்,

பாட்டெல்லாம் கேட்டீங்களா?

Prasanna Rajan said...

@ Suddi
ஏன் நீங்கள் தனியாக இதைப் பற்றி பதிவு போடக் கூடாது?

Prasanna Rajan said...

@ ரவிஷங்கர்
இளையராஜா பொறந்த அதே கரிசல் மண்ணுல பொறந்துட்டு அவரு பாட்டை கேக்காம இருந்த எப்பிடி. இந்த பாட்டை எல்லாம் ஏற்கனவே கேட்டு இருக்கேன். இருந்தாலும் உங்க தகவலுக்கு ரொம்ப நன்றி. நீங்களும் உங்க ப்லோக்'ல ராஜாவை பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.

Prasanna Rajan said...

@ ingkitcha
மிக்க நன்றி கிச்சா. கி.ரா பற்றிய பதிவும் சரி, தக்கையின் மீது நான்கு கண்களும் சரி. போஸ்ட் பன்னுனப்ப யாரும் படிக்கலை. சினிமா பத்தி பதிவு போட்டா தான் நெறைய பேரு படிக்கிறாங்க. என்ன பண்றது.

geethappriyan said...

ராஜா சார் அருமை பெருமைகளை பேசிக்கொண்டே போகலாம்.
தினமும் ரமண மாலையும் குரு ரமண கீதமும் கேட்டுபாருங்கள்.அற்புதமான யோகா போன்றதொரு பயிற்சி.
நண்பரே நீங்களும் பண்ணைபுரமா?
உங்களுக்கு கருத்து இடுவதில் பெருமை கொள்கிறேன்.
ராகதேவன் ஊராச்சே?
1983 ஆம் ஆண்டு நான் கோம்பை என்னும் ஊரில் ஹாஸ்டலில் ukg படிக்கையில் என் மனதில் பதிந்தது இந்த பாட்டு (violin beat ) (பக்கத்து ஊருக்கு கூட்டிப் போய் vaazhkai படம் பார்க்க வைத்த ஹாஸ்டல் வார்டன்கள்).அப்போ விவரம் தெரிந்து பாடல் கேட்டவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்த பாக்கியவான்கள்?
மாதத்திற்கு ஒரு இசை விருந்து.
இன்னும் 1985 ஆம் வருட ஹிட்டுகள் கேட்கும்போதே எனக்கு சிறு பிள்ளை நினைவுகள் வந்து விடும்.
தென்றலே என்னை தொடு,வெட்டி வேறு வாசம்,மனசு மயங்கும்,மரி மரி நின்னே.poove poochchoodava,raagavendhraa.vikram,
இன்னும் ஒவ்வொரு வருடம் பற்றி சொல்ல போனால் இடம் பத்தாது.
நம் ராக தேவன் நீடூழி வாழ்க.
யுவன் வேறு எங்கோ திருடி அவமானப்படுவதற்கு.
ராஜா சாரின் ஜிப்பவிலேயே கைவிடலாம்.எந்த கொம்பனும் கேட்க முடியாது.
btw சூபர் டாபிக் ராஜ சாரை பற்றி பேசும்போது எனக்கும் ஒரு குரல் குடுங்க.

Prasanna Rajan said...

நன்றி கார்த்திகேயன். நான் பண்ணைப்புரத்தில் ஒரு காலத்தில் வசித்து இருந்தேன்.கல்வி காரணமாக அங்கு இருக்க முடியவில்லை. எப்படியோ உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Share