சுஜாதாவின் 'வானத்தில் ஒரு மெளனத் தாரகை' கதையில் ஒரு இந்திய விண்வெளி
வீரர், தனது விண்வெளி நடையின் போது - எந்திரக் கோளாறு காரணமாக
விண்கலத்திலிருந்து தொடர்பறுந்து அலைக்கழிக்கப்படுவார். பல்வேறு அரசியல்
காரணங்களால் அவரை காப்பாற்ற மற்றொரு விண்கலம் அனுப்ப முடியாது என்று அவரது
கன்ட்ரோல் அறை தெரிவிக்கிறது. தனது குடும்பத்தை நினைத்து கொண்டு
விண்வெளியில் அலையும் தருணத்தில், அந்த விண்வெளியில் இருந்து பூமியை ரசித்த
வண்ணம், மெதுவாக பிராண வாயுவை இழக்கிறார் விண்வெளி வீரர். பிராண வாயு ஒரு
சதவீதம் மிச்சம் இருக்கும் போது கதை முடியும்.
'2001: A
Space Odyssey' நாவலில் இதே போல் ஒரு விண்வெளி வீரர், விண்கலத்திலிருந்து
தொடர்பறுந்து விண்வெளியில் எறியப்படுவார். அது ஒரு சிறு பகுதியே.
அதிலிருந்து தழுவியது தான் மேலிருக்கும் சுஜாதாவின் கதை. ஸ்டான்லி
க்யூப்ரிக் அந்த நாவலுக்கு எந்த வித பங்கமும் இன்றி, திரைப்படத்தை
எடுத்திருப்பார். இதுவரை வந்த விண்வெளி படங்களில் '2001' தான் எனக்கு
மிகவும் பிடித்த படம். 1968இல் கிடைத்த தரவுகளை கொண்டு, இன்றளவும்
துல்லியமாக இருக்கும் ஸ்பெஷல் எஃபக்டுகளை க்யூப்ரிக் உருவாக்கி இருப்பார்.
தத்துவார்த்த ரீதியிலான வாதங்கள் மட்டுமன்றி மிகவும் சிக்கலான, அந்த
சர்ச்சைக்குரிய முடிவு தான் இன்றளவும் '2001' பேசப்படுவதற்கு காரணம்.
'Gravity'
பார்த்து கொண்டிருக்கும் போது, 'வானத்தில் ஒரு மெளனத் தாரகை' கண் முன்னால்
வந்து சென்றது. இந்த திரைப்படத்தை ஒரு Realistic Space Apocalypse வகையில்
சேர்க்கலாம். உயிரிமருத்துவ பொறியாளரான ரயான் ஸ்டோனும் (Sandra Bullock),
முதிர்ந்த விண்வெளி வீரரான மேட் கோவால்ஸ்கியும் (George Clooney), Hubble
தொலைநோக்கியில் உள்ள பேனல்களை சரி செய்து கொண்டிருக்க - வெடித்து சிதறும்
ஒரு ரஷிய செயற்கைகோளின் துண்டங்கள், அவர்கள் வந்த விண்கலத்தை தாக்குகிறது.
அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதே கதை.
சில
மாதங்களுக்கு முன் வாஷிங்கடனில் உள்ள ஸ்மித்சோனியன் ஐமேக்ஸ் திரையரங்கில்
'Hubble 3D' டாகுமென்ட்ரியை நானும், என் நண்பர்களும் பார்த்தோம். Hubble
தொலைநோக்கியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அட்லாண்டிஸ் விண்கலம்
செலுத்தப்பட்டது. அதில் உள்ள 7 அஸ்ட்ரோநாட்கள் ஐமேக்ஸ் 3டி கேமராக்களை
கொண்டு, தொலைநோக்கியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய என்னவெல்லாம்
செய்தார்கள் என்பதை ஆவணப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாது Hubble
எவ்வாறு 'Deep Space Exploration' க்கு உதவி செய்கிறது என்பதையும்
விளக்கியிருந்தனர்.
'க்ராவிட்டி'யில் காட்டப்படும் 'எக்ஸ்ப்ளோரர்' விண்கலத்திற்கும், 'அட்லாண்டிஸ்' விண்கலத்திற்கும் எனக்கு திரையில் வித்தியாசம் தெரியவில்லை. 'எக்ஸ்ப்ளோரர்' விண்கலமோ முழுக்க, முழுக்க CGI'யில் உருவாக்கப்பட்டது. ஒரு சில ப்ராப்கள் (Props) தவிர, மற்றவை அனைத்தும் சி.ஜியில் உருவாக்கப்பட்டவை தான். பெரும்பாலான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில், விஷூவல் எஃபக்ட்டுகளுக்கு கொடுக்கப்படும் கவனம் திரைக்கதைக்கோ, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கோ கொடுக்கப்படுவதில்லை. இதற்கொரு மிகச் சிறந்த உதாரணம், இந்த வருடம் வந்த 'Oblivion'.
'க்ராவிட்டி'யில் விஷூவல் எஃபெக்ட்டுகளுக்கு கொடுத்த கவனம் மட்டுமல்லாது, கதாப்பாத்திரங்களின் மனவோட்டங்களை திரையில் நுழைத்தது தான், இந்த படம் மற்ற ஸயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. 2டியில் எடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷனில் 3டியாக மாற்றப்பட்டிருந்தாலும், 3டி இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே உலா வருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கதாப்பாத்திரங்களின் Breathing Pattern மாறுபடும். இந்த Breathing Pattern கூட Choreograph செய்யப்பட்டதாம்.
இந்த வருடம் நான் பார்த்த திரைப்படங்களில், ஆரம்பம் முதல் இறுதி வரை அலுக்காத சென்ற படங்கள் இரண்டு - ஒன்று 'Pacific Rim', மற்றொன்று 'Gravity'. படத்தில் இன்னொரு கதாப்பாத்திரம் ஹ்யூஸ்டனில் இருக்கும் 'மிஷன் கண்ட்ரோல்'. அதற்கு குரல் கொடுத்திருப்பவர் Ed Harris. ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். 'Apollo 13' திரைப்படத்தில் மிஷன் கண்ட்ரோல் தலைவர் Gene Kranz-ஆக வருவார். இந்த படத்திலும் அவரது குரல் உபயோகப்படுத்தப்பட்டது 'Apollo 13'க்கு கொடுக்கப்பட்ட ட்ரிப்யூட்டாகத் தான் நினைக்க வேண்டியிருக்கிறது.
மிகவும் சிரீயசாக செல்லும் திரைக்கதையில், க்யூரன் நடுவே கொஞ்ச்ம் ட்ரை ஹ்யூமரை நுழைத்துள்ளார். இது வரை படத்தை இரண்டு முறை திரையரங்கில் பார்த்த பின்பும், அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. கண்டிப்பாக ஐமேக்ஸில் மட்டுமே பாருங்கள்.

No comments:
Post a Comment