Friday, August 21, 2009

Inglourious Bastards [2009] - இரத்தமும், சதையும் கலந்து செய்த காமிக்ஸ் புத்தகம்


இன்னாடா இது? தலைப்புலியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குதேனு, கொஞ்சம் உஷாராகத் தான் தியேட்டருக்கு போனேன். படம் போட்ட பிறகு தான் தெரிந்தது, அதற்கான காரணம். வரலாறு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்தது இந்த படம். முக்கியமாக ஒன்னு. நீங்கள் ஒரு Pulp Fiction அல்லது Reservoir Dogs - ஐ இந்த படத்தில் எதிர் பார்க்க முடியாது. அதனால் தான் என்னவோ, பெரும்பாலான விமர்சகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. இந்த படத்திற்கும், இரண்டாம் உலகப் போர் வரலாற்றுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லை. ஒரு வரலாற்று திரைப்படத்தை எதிர்பார்த்து சென்றீர்கள் ஆனால், தயவு செய்து இந்த படம் போட்ட த்யேட்டர் பக்கம் கூட போக வேண்டாம்.

சரி கதை என்ன?
கதை ரெம்ப, ரெம்ப சின்ன கதைங்கோ. மெயின் திரைக்கதை சரடு என்னான்னா, இப்படி வரலாற்றில் நடந்தால் எப்படி இருக்கும் என்பது தான். ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டு இருக்கும் ப்ரான்ஸில், யூத அமெரிக்க இராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு குழு, நாஜிக்களை கொன்று குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றனர். அதுவும் சாதாரணமாக கொல்வதல்ல அவர்களின் குறிக்கோள். ஒவ்வொரு நாஜியையும், அவர்களது மேல்தலையை(முடியோடு சேர்ந்த மேல் தலை. புரியாவிடின் கில்பில் வால்யூம் 1ஐப் பார்க்கவும்) கொய்து எடுக்க வேண்டும். அவர்களின் தலைவன் லெஃப்டினண்ட் ஆல்டோ ரைன் (Brad Pitt). அவனுக்கு துணையாக ‘The Bear Jew' என்றழைக்கப்டும் சார்ஜண்ட் டான்னி (Eli Roth) மற்றும் ஒரு எட்டு வீரர்கள். இவர்களுக்கு இடையில் இரத்த வெறி அடங்காது, ப்ரான்ஸிலும் யூதர்களை கொன்று குவிக்கும் கலோனல். ஹான்ஸ் லாண்டா (Christoph Waltz). திரைப்படத்தின் ஆரம்பத்தில், லாண்டாவால் தனது குடும்பமே கொலை செய்யப்பட்டு, அவனை பழி வாங்கத் துடிக்கும் ஷோசன்னா (Melanie Laurent). ஜெர்மனிய நடிகையாகவும், அமெரிக்க உளவாளியாகவும் செயல்படும் ப்ரிட்ஜெட் (Diane Kruger - செம பிகரு மாமே). இப்படி ஒரு சிக்கலான கதாப்பாத்திர அமைப்புகளுக்கிடையே பயணிக்கிறது திரைக்கதை.

படத்தின் டைட்டில் காட்சிகள் 70களில் வெளியான பல இரண்டாம் தர, வெஸ்டர்ன் மற்றும் ஆக்ஸன் திரைப்படங்களை நினைவூட்டுகிறது. அதற்கு வலு சேர்ப்பது போல, படத்தின் ஆரம்ப காட்சி ஒரு ஸ்பாகெட்டி வெஸ்டர்னின் ஆரம்பத்தையே நினைவூட்டுகிறது. முக்கியமாக படத்தின் துவக்க ப்ரேம், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘Unforgiven'ஐ நினைவு படுத்த தவறவில்லை. ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் கதை (இயக்குனர் முத்திரை :D), இரண்டரை மணி நேரமாக நீண்டு இருந்தாலும் போனதே தெரியவில்லை. அப்படி ஒரு வேகம். இத்தனைக்கும், படத்தின் நடுவில் சட்டென்று ஒரு ட்ராமா வகைத் திரைப்படத்தைப் பார்க்கிறோமோ என்று தோன்றினாலும், சட்டென்று ஆக்‌ஷன் ட்ராக்கில் மாறி பயணிக்கிறது. 'Valkyrie' என்ற ஒரு Tom Cruise படம் ஒன்றைப் பார்த்தேன். இதுவும் ஹிட்லரை கொல்லும் முயற்சி பற்றிய படம் தான். ஆனாலும் படம் ஒரு அரை மணி நேரம் கூட பார்க்க முடியவில்லை. அதுக்கெல்லாம் இந்த படம் ஆயிரம் மடங்கு தேவலாம்.

என்ன புதுசு?
என்ன?? இது வரைக்கும் க்வண்டின் டொரண்டினோ படம் பார்த்தில்லையா நீங்க. அனேகமாக பார்க்காம இருந்திருக்க மாட்டீங்க. படத்துல எல்லாமே பழசு தான். ஆனாலும் புதுசு. (இன்னா சொல்ல வர்ற? ஆட்டோ அனுப்பனுமா?). அப்புறம் ஸ்டைல் மாமே. சும்மா சூப்பர் ஸ்டார் மாதிரி நட்சித்திரங்கள், போரடிக்காம குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) பேசுறாங்க. உங்களால் வன்முறைக் காட்சிகளை சகிக்க முடியவில்லை எனில் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம். கில் பில் அளவிற்கு இதில் வன்முறை இல்லை எனினும், ஒரு சில காட்சிகள் உவ்வே ரகம் தான். ஒரு காட்சியில் குண்டடி பட்டு கிடக்கும் டயான் க்ருகரை விசாரிப்பதற்காக ப்ராட் பிட், அந்த குண்டடி பட்ட இடத்திலேயே, விரலை வைத்து நோண்டுவார். பத்தாதற்கு இதில் க்ளோசப் வேறு. இந்த காட்சியின் போது த்யேட்டரை விட்டு ஒரு நாலு பேரு எழுந்து போனாங்கோ.

”The Dirty Dozen" என்ற படத்தை பெரும்பாலும் தழுவியே இந்த படத்தை எடுத்து இருக்கிறார் குவெண்டின். பல இரண்டாம் உலகப் போர் திரைப்படங்களையும் நினைவு படுத்த தவறவில்லை. ப்ராட் பிட் நன்றாகவே காமெடியிலும் கலக்கியிருக்கிறார். டென்னஸி ஆக்ஸண்டில் அவர் இத்தாலியன் பேசும் போது அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. ஆனாலும், படத்தில் ப்ராட் பிட்டை நடிப்பில் தூக்கி சாப்பிடுவது படத்தின் வில்லன் கிறிஸ்டோப் வால்ட்ஸ் தான். மனிதர் ஆரம்பத்தில் பார்க்க காமெடியன் போல் இருந்தாலும், படத்தின் ஆரம்ப அத்தியாயத்தில், ப்ரெஞ்சு விவசாயியை விசாரிக்கும் காட்சியில் மெதுவாக முதுகை சில்லிட வைக்கிறார். படத்தின் பிண்ணனி இசை பெரும்பாலும் Ennio Morricone இசையமைத்த வெஸ்டர்ன் படங்களில் இருந்தே எடுக்கப் பட்டுள்ளது. அதனால் தான் என்னவோ படம் முழுக்க ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தைப் பார்ப்பது போல தோன்றியது.

படத்தில் சில நீளமான காட்சிகள். முக்கியமாக ஒரு பாரில் நடக்கும் உரையாடல் 20 நிமிடத்திற்கு மேல் நீள்கிறது. ஆனால் அதையும் சுவாரசியமாக எடுத்து சொல்ல குவெண்டினால் மட்டுமே முடியும். சீரியசான காட்சிகளில் எல்லாம் சிரிப்பு வருது. முக்கியமாக, Eli Roth ஜெர்மன் இராணுவ அதிகாரியை தனது பேஸ்பால் மட்டையால் அடித்து மூளையைப் பிளக்கும் போது, அரங்கம் ஒரு திகிலோடு சிரித்து கொண்டு தான் இருந்தது. அப்புறம் படத்தில் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரத்தை பற்றி சொல்ல மறந்து விட்டேன். அது செர்ஜண்ட் ஹ்யூகோ(Til Schweiger). நம்ம ஆளு இண்ட்ரொடக்‌ஷன் போட்டப்போ, த்யேட்டரில் சிரிக்காதவர்கள் யாருமே இல்லை.

பாஸ்டர்ட்கள் உயிரோடு விடும் ஒவ்வொரு நாஜிக்களின் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை இடுவார்கள். அதே போல் படத்தின் இறுதியில் (அய்யய்யோ க்ளைமாக்ஸை சொல்லாத!!) ப்ராட் பிட், கிறிஸ்டோப் வால்ட்ஸ் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை கத்தியால் கிழித்த பின் (கீறல் இல்லை, கிளித்தல். இதிலும் க்ளோசப்) ஆடியன்ஸிடம் “Thhis ees gonna bee my masterpiece" என்று சொல்வதோடு படம் முடியும். இது குவெண்டினின் மாஸ்டர் பீஸ் இல்லாவிடினும் ஒரு திருப்தியான, அலுக்காத மசாலாப் படம் பார்த்த பின் என்ன திருப்தி ஏற்படுமோ, இந்த படத்தைப் பார்த்த பின்னும் உங்களுக்கு தோன்றும். மேலே சொன்னதைப் போல் Inglourious Bastards, இரத்தமும் சதையும் கலந்து செய்த காமிக்ஸ் புத்தகம். இன்னொரு தபா எப்ப பார்க்க போறேன்னு தெரியலை...


39 comments:

Prakash said...

மரியாதையா இதே மாதிரி பேரரசு படங்களையும் நீங்கள் புகழ வேண்டும். உமது க்வின்டின் ரசிகத்தன்மையை காட்டுகிறது விமர்சனம். ஹாலிவுட் பேரரசு ஒழிக. அது எப்படி படத்தில் இருக்கும் அனைத்து மசாலத்தனங்களையும் சுட்டி காட்டி விட்டு நல்லா இருக்கிறது என்கிறீர்.

சரி அந்த பிகர் போடோவாது போட்டீரா? இதுக்குன்னே தமிழ்மணத்தில் நெகடிவ் வாக்களிக்கிறேன் இரும்

Prasanna Rajan said...

ஏய் தல பேரரசைப் யாரோடயும் கம்பேர் பண்ணக் கூடாது. எப்பவும் ஒரே பேரரசு தான், அவரை யாரோடயும், ஏன் குவேண்டினோடக் கூட ஒப்பீடே செய்யக் கூடாது. பிகர் போட்டோ தானே போட்டுட்டா போச்சு... :D

குப்பன்.யாஹூ said...

i too want to negative vote for thie review. But i dont know how to dio, tell me nagrive vote mthod.

Prasanna Rajan said...

வணக்கம் இராம்ஜி. வருக. ஏன் இந்த கொலை வெறி. என்னத்துக்கு பாஸ் நெகட்டிவ் ஓட்டு போடனும்கிறீங்க. எதுனா ப்ரச்சனைன்னா பேசி தீர்த்துப்போம் பாஸ்...

பாலா said...

பேரரசு கூட..., க்வெண்டினை கம்பேர் பண்ணுற பிரகாஷை..., என்ன பண்ணலாம் சொல்லுங்க.

எது பண்ணினாலும்... அதை க்ளோஷப் ஷாட்டில்-தான் பண்ணனும்!!! :) :)

Athisha said...

இப்போதான் நம்ம ஹாலிவுட் பாலாவோட விமர்சனம் பார்த்துட்டு வரேன்.. இங்கேயும்..

டிவிடிலதான் பாக்கணும்

உண்மைத்தமிழன் said...

ஹாலிவுட் பாலாவும் இன்றைய விமர்சனமா இதைத்தான் போட்டிருக்காரு..

ரெண்டு பேரும் பேசி வைச்சிட்டு செய்றீங்களோ..?!!!

க்வின்டினின் திரைப்படங்களை ஆயும் அளவுக்கு என் தலையில் பேன் இல்லை என்பதால் படம் வந்தாலும் பார்க்கப் போவதில்லை.

காசைக் காப்பாற்றிய உமக்கு முருகன் அருள் புரியட்டும்..!

Prasanna Rajan said...

வருகைக்கு நன்றி பாலா. ஏண் பேரரசு கூட கம்பேர் பண்ணுறன்னு கேட்டா, குவெண்டினும் பேரரசு மாதிரியே வன்முறையா எடுக்கிறார்ன்றான். இவனையெல்லாம் கட்டி வைச்சு, பேரரசு படம் அத்தனியும் பார்க்க வைக்கனும். விட்டா ‘Deathproof'ஓட இன்ஸ்ப்ரேஷன் ‘திருப்பாச்சி’னு சொல்வான் போல இருக்கு.

//எது பண்ணினாலும்... அதை க்ளோஷப் ஷாட்டில்-தான் பண்ணனும்!!! :) :)//

அது சரி. விட்டா இந்த படத்துல அனாடமி க்ளாஸே எடுப்பாங்க போல இருக்கு. அவ்ளோ க்ளோசப்...

Prasanna Rajan said...

வாங்க அதிஷா...

உங்கள் வருகைக்கு நன்றி...

Prasanna Rajan said...

வருக உண்மைத் தமிழரே...

படத்தை முடிஞ்சா டிவிடில பாருங்க. ஏன்னா ப்ராட் பிட் பேசுற பல இடங்கள்ல சப் டைட்டில் தேவை படும். க்வெண்டினோட படங்கள் எல்லாம் ஆயனும்னு அவசியம் இல்லை. ஜாலியா மசாலா படம் பார்க்குற மாதிரி விசிலடிச்சுகிட்டே பார்க்கலாம். இந்த முருகன் அருள்லாம் ரெம்ப ஓவர் பாஸ். வாழ்த்துக்கு நன்றி...

Prakash said...

பாலா சார் , அது சும்மா நானும் பிரசன்னாவும் விளையாட்ட பேசிக்கிறது. கார்டியன் விமர்சனம் படித்தீர்களா?

Prakash said...

யோவ் பிரசன்னா , நீர் திருவண்ணாமலை பார்த்திருக்கிறீரா ? :x சுவாமிமலை கதாபாத்திரம் தெரியுமா? . என்னோட " டூட்டி" யை பார்க்கவிடுங்கன்னு எங்க தலைவன் இன்னாம்மா பன்ச் அடிப்பான் தெரியுமா?

Prakash said...

i too want to negative vote for thie review. But i dont know how to dio, tell me nagrive vote mthod.//

ஹி ஹி , கூட்டம் கூடுதுடா பிரகாஷா.

Prasanna Rajan said...

கடையை காலி பண்ணு... இல்லைன்னா கமெண்ட் கல்லா கட்டாது... :D

Prasanna Rajan said...

தல பேரரசோட எல்லா படத்தையும் (”பழனி” கூட) பார்த்தவன் நானு. எங்கிட்டயேவா...

சென்ஷி said...

:)

நல்லா எழுதியிருக்கீங்க பிரசன்னா!

Prasanna Rajan said...

மிக்க நன்றி சென்ஷி...உங்கள் வருகைக்கும் நன்றி...

geethappriyan said...

ப்ரசன்னா
ரொம்ப நல்ல விமர்சனம்
தாமதிக்காமல் பதிவிட்டமைக்கு நன்றி.
give me five.

குவெண்டின் படங்களில் இருக்கும் பழய பட சாயல் அவராலே நினைத்தாலுமே தடுக்க முடியாது.
அவர் கதை எழுதிய படமான
natural born killers ஒன்று போதும்.
அவரின் கொலை வெறி எப்படி இருக்கும் ? என பறைசாற்ற...

narration தந்த மார்கன் ஃப்ரீமெனை பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே?
அதில் எனக்கு ஏமாற்றமே..
gulf region இல் இந்த படம் வர
இரண்டு மாதம் எடுக்கும்.
சில சமயம் வராது.
(இது ரம்ஜான் நேரம்)
தரவிரக்க வேண்டியது தான்.

உங்கள் இலக்கிய ஒப்பீடுகள் எங்கே?
(ஆமா...எழுதினா மட்டும்?)

வோட்டுக்கள் போட்டாச்சு.
இவன்
இங்லோரியொஸ் பாஸ்டர்ட்ஸ்
ரசிகன்.

பாலா said...

//narration தந்த மார்கன் ஃப்ரீமெனை பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே?//

இல்லீங்க கார்த்திகேயன். அது சாமுவெல் ஜாக்ஸன். நேரேசன் எல்லாம் ஒரு கன்றாவியும் இல்லை. மிஞ்சி போனா.. 2 வரி டயலாக் இருக்கும்.

Prasanna Rajan said...

வருகைக்கு நன்றி தல.மார்கன் ஃப்ரீமேன் எங்கிட்டு பாஸ் வந்தாரு. படத்திற்கு Narration செய்தது சாமுவேல் ஜாக்சன். இலக்கிய ஓப்பீடு எல்லாம் எழுதுனா கல்லைக் கொண்டு அடிக்கிறாய்ங்க. அதனால மொக்கையோட நிறுத்திக்கிறேன்... :D

Prasanna Rajan said...

@ பாலா

இன்னா வேகமா கமெண்ட் போடுறீங்க பாஸ்...

பாலா said...

எழவு.. தூக்கம் வந்து தொலைய மாட்டேங்குது.

அதான்.. ஒரே.. கும்மி மூட்-ல இருக்கேன். :) :)

Prasanna Rajan said...

இங்கயும் அதே ப்ரச்சனை தான், எதுக்கும் ‘பொக்கிஷம்’ ஆன்லைன்ல இருந்தா பாருங்க.தூக்கம் தானா வரும்... :D

geethappriyan said...

ப்ரசன்னா
இரவு cleaner என்னும் படம் பார்த்தேன்.
அது முடிந்ததும் the bucket list பார்த்தேன்,அதன் விலைவே.
பெயரை மாற்றிவிட்டேன்.
இருவரும் நல்ல நடிகர்கள். நல்ல குரல் வளம் கொண்டவர்கள்.தாம்

Prasanna Rajan said...

@ கார்த்திகேயன்

அட விடுங்க பாஸ்...

பாலா said...

//இரவு cleaner என்னும் படம் பார்த்தேன்.//

பந்தாவா ஆரம்பிச்சி... சப்பையா முடியும் படம். உங்களுக்கு பிடிச்சிருந்ததா.. கார்த்திகேயன்?

geethappriyan said...

@நண்பர் பாலா,
cleanerநல்ல நடிப்பு வீணடிக்கப்பட்ட படம்.
நல்ல ஒளிப்பதிவு.காட்சிஅமைப்பு.

எல்லாவற்றிக்கும் மேல்
நாம் அறிந்திராத ஒரு தொழில்..

படு சொதப்பலான தமிழ்பட கிளைமேக்ஸ்.

Anonymous said...

en sir... ungalukku valkyrie Movie pidikalaya... enakku ennavo roomba pidichirundhadhu.... inga theater almost full one week appuram kooda.... mm paravayillai ... indha padathukku poogalmnnu ninachen ... ippo konjam yosichittu pooganum poola irukku... ennoda first comment in your blog... Thank you so much

Prasanna Rajan said...

வணக்கம் அனானி... உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. அது என்னவோ எனக்கு கொஞ்சம் Tom Cruise அலர்ஜி. அதிலும் அந்த ஆளை ஒற்றைக் கண்ணில் பார்த்த போது காண்டாகத் தான் செய்தது. என்னைப் பொறுத்த மட்டில் அந்த படத்தில் எடிட்டர் தூங்கிக் கொண்டிருந்தார் என்றே சொல்வேன். படம் அவ்வளவு மெதுவாகச் சென்றது. எப்படியோ, அந்த படத்துக்கு எல்லாம் பாஸ்டர்ட்ஸ் , பரவாயில்லை...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

படத்தினைப் பற்றிய உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை ரசிப்பதற்கும், மீளப் பார்ப்பதற்கும் ஒருவர் டாரண்டினோவின் ரசிகராக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

நகைச்சுவை கலந்த வன்முறைகளால் படம் தப்பித்துக் கொள்கிறது. நீண்ட உரையாடல்கள் குறிப்பாக அந்தப் பார் காட்சியில் என்ன நடக்கப் போகிறது எனும் எதிர்பார்ப்பே காட்சியோடு ஒன்றிப் போக வைக்கிறது. உரையாடல் அல்ல. மிகச்சிறந்த உரையாடல் ஹாண்ஸ் லாண்டாவின் ஆரம்பக் காட்சி என்று நான் கருதுகிறேன்.

நாஸிக்களின் முடிவை ஒர் திரையரங்கினுள் வைத்து தீர்மானித்திருக்கிறார் இயக்குனர். அவர் களிற்கு டாரண்டினோ தரும் தீர்ப்பாக அது அமைகிறது. அதையும் தாண்டி வஞ்சத்தின் வெறிச் சிரிப்பும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

ஜீவா ஓவியக்கூடம் said...

தெளிவான விமர்சனம்..பல இடங்களில் இந்த படத்தை பற்றி படித்தேன்...oohum.. இப்போதுதான் புரிந்தது. படம் பார்க்கவேண்டும்!

Prasanna Rajan said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி கனவுகளின் காதலரே.

Prasanna Rajan said...

மிக்க நன்றி ஜீவா சார்...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஒட்டுப் போட்டாச்சுங்க...

Prasanna Rajan said...

என்னது அண்ணனா? நான் உங்களுக்கு கடைசி தம்பி அண்ணே. இப்புடி சொல்லி நீங்க யூத் ஆகிக்கிருங்களா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

Anonymous said...

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

Prasanna Rajan said...

டாக்டர் சார் என்ன சொல்ல வர்றீங்க? என்னோட கருத்து ஏன் உங்க கருத்தாக இருக்கனும்னு நான் ஏன் எதிர்பார்க்கனும்?

Prasanna Rajan said...

அய்யயோ!! ப்ளாக் பாலிட்டிக்ஸா... எனக்கு கை எல்லாம் உதறுது. இரண்டாவதா பதிவு போட்டவ்ர் தான் உண்மையான டாக்டர் புரூனோ என்று தெரிகிறது. இது சம்பந்தமான உங்கள் பதிவையும் படித்தேன்.

அது இருக்கட்டும் பாஸ். ஆரட்டாரியோவுக்கும், சிம்பொனிக்கும் என்ன வித்தியாசம். பாமரனுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ. அதுக்காக ஏன் இப்பிடி இராக தேவனை வாரு, வாருன்னு வாருறீங்க???

அகல்விளக்கு said...

//Prakash said...
சரி அந்த பிகர் போடோவாது போட்டீரா? இதுக்குன்னே தமிழ்மணத்தில் நெகடிவ் வாக்களிக்கிறேன் இரும்//

இதை நான் வழிமொழிகிறேன்.

Share