Monday, August 10, 2009

சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதையும்’ கல்கியின் சரித்திர நாவல்களும்




STD - ன்னா வரலாறு தானே என்று திரிந்து கிடந்த எனக்கு சரித்திரத்தில் கொஞ்சமாவது பிடிப்பு ஏற்படுத்தியவை கல்கியின் நாவல்களே. ’பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ’பொன்னியின் செல்வன்’ மூன்றுமே தமிழின் ஆகச் சிறந்த படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், கல்கியின் பாத்திர படைப்புகள் பெரும்பாலும் கொட்டாவி விடவே வைத்தன. கல்கியின் பாத்திரங்கள் ஒன்று ரெம்ப நல்லவர்களாக இருப்பார்கள், அல்லது ’தவசி’ பாசையில் ரெம்ப ரெம்ப கெட்டவர்களாக இருப்பார்கள். ‘பார்த்திபன் கனவு’ என்னைப் பொறுத்த மட்டில் அவரின் மிகச் சிறந்த முழுமையான படைப்பு. அதற்கு பிறகு ‘சிவகாமியின் சபதம்’, அதற்கு அடுத்த வரிசையில் தான் எல்லோராலும் கொண்டாடப் படும் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் பாத்திரங்களின் அளவுக்கு அதிகமான ரொமாண்டிஸிஸம், என்னை பல சமயங்களில் தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இது அனைத்தும் எனது கருத்தே.


சரி சரி மேட்டருக்கு வரேன் மாமே. இப்ப தான் சுஜாதாவின் இரண்டாவது சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை’யைப் படித்து முடித்தேன். (அவரின் முதலாவது சரித்திர நாவல் ‘இரத்தம் ஒரே நிறம் - முதலாம் சிப்பாய் கலகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தார்). கதை வழக்கம் போல் சோழப் பேரரசின் காலத்தில் நடக்கும் கதை. ஆனால் கதை நாயகன் நம்ம வசந்த குமாரன். அவனுக்கு குரு போல் இருந்து செயல் படுபவர் கணேச பட்டர். இந்த பேரை எல்லாம் எங்கே கேட்டது போல் இருக்குதா. ஆமாம் பாஸீ. கணேஷ், வசந்த் ஒரு சரித்திர நாவலில். ஷப்பா!! இன்னாமா யோசிச்சு இருக்காருப்பா சுஜாதா. சத்தியமாக மேலே சொன்ன வரிகளை எழுதும் முன் இந்த பாத்திரப் படைப்பை நான் உணரவில்லை.

நம்ம வசந்தகுமாரன் வழக்கம் போல் பெண் பித்தன். சூதாடுபவன். நம்மாளு சிக்கல்ல மாட்டும் போதெல்லாம் நம்ம கணேச பட்டர் தான் காப்பத்துறாரு. கணேச பட்டர் பிரம்மதேய பணியில் இருப்பவர் (லாயர் மாமே). யவன தேசத்தில் (க்ரீஸ்) இருந்து வரும் ஒரு குதிரை வணிகனிடம், குதிரைகளை வாங்குவதற்காக பேரம் பேசும் வசந்தகுமாரன், அவனை ஒரு பதியிலார் விடுதிக்கு (ஹிஹி... அர்த்தம் புரிஞ்சதா??!!) அழைத்து செல்ல அங்கு மர்மமான முறையில் அவன் இறக்கிறான். அதற்கு பிண்ணனியில் உள்ள சதி என்னவென்று கணேச பட்டர் உதவியுடன் ஆராய அது இராஜ இராஜ சக்கரவர்த்தியை சேர, பாண்டியர்கள் கொலை செய்யும் சதியில் வந்து முடிகிறது. கதையின் முடிவை போட்டு உடைக்க விரும்பவில்லை. அதனால் படித்து தெரிந்து கொள்ளுங்களேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத நினைத்திருக்கிறார். அது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் இறுதி அத்தியாயம் முழுமையாக முற்று பெறவில்லை.

சரித்திரத்தின்படி பார்த்தால் காந்தளூரில் நிகழ்த்திய யுத்தம் தான் முதலாம் இராஜ இராஜ சோழன் நிகழ்த்திய மிகப் பெரிய துவந்த யுத்தம். கி.பி 994இல் சேரனும், பாண்டியனும் இணைந்து சோழர்களுக்கு எதிராக நடத்திய இந்த யுத்தத்தின் பின்னர் இராஜ இராஜன் மும்முடிச் சோழன் என்னும் புகழ் பெற்றான். காந்தளூர் இன்னும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. அதன் பின்னர் உதகை கோட்டை யுத்தம், அதன் தொடர்ச்சியாக இலங்கை யுத்தம். இப்படி தான் செல்கிறது முதலாம் இராஜ இராஜனின் வரலாறு. வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் புனைவு தானே. இந்த வரலாற்றில் கணேஷ், வசந்த் கதாப் பாத்திரங்களை புகுத்தியது தான் சுஜாதாவின் சாமர்த்தியம்.

நாவலின் ஆரம்பத்திலே சுஜாதா சொல்லி இருக்கிறார். ”கட் அவுட் கதாப்பாத்திரங்களாக அமைக்காமல் அவற்றை சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறேன்” என்றிருக்கிறார். உண்மை தான். கல்கியின் கதாப்பாத்திரங்களின் ரொமாண்டிஸிஸம் இங்கு சுத்தமாக இல்லை. கதையின் நாயகன் ஒழுக்க சீலனாக இல்லாமல், சூப்பர் ஹீரோ போல் காட்டாமல் மிகச் சாதாரணமாகக் காட்டி இருந்தார்.சரித்திரப் படி, மிகத் துல்லிய தகவல்களை தர மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். அங்கங்கே சுஜாதா டச். முதல் பாகத்திலேயே மசாலா மேட்டரை ஆரம்பித்திருந்தார் சுஜாதா ( பதியிலார் விடுதி!! இன்னும் புரியலையா??).இருப்பினும் கதையின் வேகத்தில் ஏனோ கொஞ்சம் மந்தம். வழக்கமான கணேஷ், வசந்த் நாவலின் சூடு இல்லை.

‘யவனிகா’ நாவலின் கடைசியில் வசந்த் சொல்வதாக ஒரு வரி வரும். “இந்த கதையைப் படமா எடுத்தா புரொடியூசர் வெடிகுண்டுக்கு செலவு பண்ணியே போண்டி ஆகிடுவார்”. சுஜாதா என்றும் தன் நாவல்களை திரைப்படமாக எடுக்கப் பட விரும்பியதில்லை. அதை தனது நாடகம் ஒன்றில் அவரே தெரிவித்து இருந்தார். ஆனால் என்னமோ இந்த நாவலைப் படிக்கும் போது மனதில் ஒரு பெரிய பிரம்மாண்டமான திரைப்படம் ஓடியது. கல்கியின் சரித்திர நாவல்களுக்கு, முக்கியமாக ‘பொன்னியின் செல்வனுக்கு’ ஒரு சமர்ப்பணம் போல் தான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. இந்த நாவலின் இன்னொரு பாகம் ஏன் வெளிவரவில்லை என்ற ஏக்கம் தான், ஏனோ ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

16 comments:

யாசவி said...

let me read this first.

But ponniyin selvan also an interesting novel.

Prasanna Rajan said...

வருகைக்கு நன்றி வாசவி. கண்டிப்பாக படியுங்கள், மிக அருமையான நாவல்...

Prakash said...

மாம்ஸ் , இருத்தியல் பின் நவீனத்துவம் , சரித்திரம் , உலக திரைப்படங்கள் என்று உருப்படியாக எழுதுவதை கடுமையாக கண்ணடிக்கிறேன். சீ கண்டிக்கிறேன்

Prasanna Rajan said...

அது என்னமோ உண்மை தான். உருப்படியா எழுதுனா ஒரு பய படிக்க மாட்டேங்கிறான். மொக்கை போட்டா மட்டும் ஒரு பத்து பேர் ஒன்னு கூடுறாங்க. கவுண்டர் சொன்னா மாதிரி “சத்திய சோதனை”... :D

துபாய் ராஜா said...

கதையை இதுவரை படித்ததில்லை என்றாலும் சுஜாதா நன்றாகத்தான் எழுதியிருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.சீக்கிரம் படிக்க முயற்சிக்கிறேன்.நல்லதொரு விமர்சனத்திற்கு நன்றி.

Prasanna Rajan said...

வருகைக்கு நன்றி துபாய் ராஜா. கண்டிப்பாக படியுங்கள். உங்களுக்கு பிடிக்கும்...

Unknown said...

for me " மயில் விழி மான்" is d best of kalki and then i will rate sivakamiyin sabatham rest..no lo so.

I am not a great fan of sujatha's stories too but i luv his articles.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றாக இருக்கிறது தல...,

Prasanna Rajan said...

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ்...

Prasanna Rajan said...

’மயல் விழி மான்’ படித்ததில்லை சரவணா. படிக்க முயற்சிக்கிறேன்...

Unknown said...

i want to download all tamil historical stories.pls let me know the website where i can load historical novels

Unknown said...

i want to download all tamil historical stories.pls let me know the website where i can download historical novels

Vetirmagal said...

Hi,
Came here through Parisalkaran.

Glanced through your blog. Good write ups. I would like to read in detail.

I started reading Tamizh writing when I was in school. I was young and totally in awe of Kalki. I used to argue with people that Tamizh novels are the best..

As I started reading other languages, and English, I realised there are great writings in the world that will make u read them again and again and touch you in various ways.

Then I went back to Kalki , years later.Alas, I felt it was not so absorbing any more..

Is it all due to exposure at the right age? I am grateful to Kalki, Saavi and others to open up the world of books

I have moved on and am slightly sad that I am unable to enjoy those bulky books anymore?

I wonder.

Thanks.

எல் கே said...

அதாவது, கல்கி எழுதிய நாவல்களில் முதலில் வருவது பொன்னியின் செல்வன், பிறகு சிவகாமியின் சபதம் பின்தான் பார்த்திபன் கனவு...

Prasanna Rajan said...

@ LK

கால வரிசைக்கிரமமாகவோ அல்லது பிரபலம் அடைந்த நாவல்களாகவோ நான் வரிசைபடுத்தவில்லை. எனக்கு பிடித்த வரிசையில் நான் கூறியிருக்கிறேன். ‘பார்த்திபன் கனவு’ நறுக் தெறித்தாற் போல் சீக்கிரம் முடிந்துவிடும்.

மாறாக, ‘பொன்னியின் செல்வன்’ பிடித்து இருந்தாலும் நாவலின் முடிவில் அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அப்பாதுரை said...

'காந்தளூர்..' படிச்சதில்லிங்க. நல்ல அறிமுகம் தந்திருக்கீங்க. கல்கி-சுஜாதா வரலாற்றெழுத்தைக் கொஞ்சம் விவரமா விவாதிப்பீங்கனு பாத்தேன் :)

Share