Monday, June 1, 2009

கிளிண்ட் ஈஸ்ட்வுட் - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


நேத்தே இந்த பதிவைப் போட்டு இருக்கனும். ஏன்னா நேத்து (31/5/2009) தான் இவருக்கு பிறந்தநாள். நம்ம தமிழ் மக்களுக்கு தெரிந்த மட்டில் இவரு தான் ’குவிக் கன் முருகன்’. 79 வயசு முடிஞ்சும் இன்னும் படம் இயக்குறதை இவரு விடலை. ஒரு சாதாரண டி.வி நடிகரா வாழ்க்கையைத் தொடங்குன கிளிண்ட் ஈஸ்ட்வுட், ஒவர் நைட்ல பிரபலம் ஆனது அவரோட ‘ஃபிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ்’ படத்துனால. அதுக்கப்புறம் ‘For a Few Dollars More', மிக முக்கியமான படமான ‘ The Good, The Bad and The Ugly', எல்லாம் ஹாலிவுட்டோட புது சூப்பர் ஸ்டாரா மாத்திருச்சு. இந்த மூணு படமுமே செர்ஜியோ லியோனி இயக்கத்துல வெளி வந்தவை.


இந்த படங்களுக்கு அப்புறம் தொடர்ந்து அவர் நடித்த ‘Hang 'em High', 'Paint Your Wagon', 'Two Mules For Sister Sara', 'Joe Kidd' ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ஒரு கவ்பாய் ஆகவே முன்னிலைப் படுத்தின. இந்த இமேஜில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஈஸ்ட்வுட் தானே இயக்கி நடித்த படம் ‘Play Misty for Me'. ஒரு டிஸ்க் ஜாக்கியாக இந்த படத்தில் தோன்றுவார். இதை தொடர்ந்து ‘சான் பிரான்ஸிஸ்கோ’ நகர காவல் துறை அதிகாரியாக அவர் தோன்றிய ‘Dirty Harry', ரசிகர்களிடம் மட்டுமல்லாது, விமர்சகர்களிடமும் பாரட்டுப் பெற்றது. இந்த படத்தில் அவர் தோன்றிய இன்ஸ்பெக்டர் 'Harry Callahan' கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து, ‘Magnum Force', 'The Enforcer', 'Sudden Impact', The Dead Pool' போன்ற படங்கள் வெளி வந்தன. இருப்பினும், முதல் படம் அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பு இருந்தாலும் விமர்சகர்களிடம் பாராட்டு பெறவில்லை. 

திரை உலகில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு தொய்வு காலம் வரும் அல்லவா. அது கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கும் வந்தது.80களின் இறுதியில் வெளியான 'Pink Cadillac', 'The Rookie' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததோடு, விமர்சகளின் பாராட்டையும் பெறவில்லை. ஒரு படைப்பாளி வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது தான், ஒரு அருமையான படைப்பு அவனிடம் இருந்து வெளிவரும் என்று கூறுவார்கள். அதே போல் எல்லோருக்கும் பதில் சொல்வது அவர் இயக்கி, நடித்து வெளிவந்த படம் தான் ‘Unforgiven'. செர்ஜியோ லியோனியின் வெஸ்டர்ன்களுக்கு அடுத்து எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் நீங்காது இடம் பிடித்த படம் இந்த படம். மேலும் இந்த படம் இவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று தந்தது.

இதற்கு பிறகு திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்திய ஈஸ்ட்வுட், 'A Perfect World', 'True Crime', 'Blood Work', 'Space Cowboys' ஆகிய படங்களை 90களின் இறுதியில் இயக்கினார். 'Mystic River', 'Million Dollar Baby' மூலம் திரும்பவும் ஆஸ்கர் பயணத்தைத் தொடர்ந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட், ‘The Flags of our Fathers', 'Letters from Iwo Jima' போன்ற சிறப்பான திரைப்படங்களையும் இயக்கினார். 2008ஆம் ஆண்டும் இவருக்கு சிறப்பான ஆண்டாகவும் அமைந்தது. ‘Changeling', 'Gran Torino' ஆகிய இரு அழகான திரைக்காவியங்கள் இவர் இயக்கத்தில் வெளி வந்தன. 

இதில் இவர் நடித்த ‘Gran Torino'வை தமிழ் சினிமாவின் ஒவ்வொரு இயக்குனரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த படத்தைப் பற்றியே ஒரு நீண்ட பதிவு போடலாம். ஏன் கிளிண்ட் ஈஸ்ட்வுடின் ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் தனித்தனியாக பதிவு போடலாம். இந்த வயதிலும் படம் இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'The Bourne Ultimatum' புகழ் மேட் டேமனைக் கொண்டு ‘The Human Factor' என்ற திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். மார்க்கண்டேயனாகத் திகழும் கிளிண்ட் ஈஸ்ட்வுடிற்கு, இந்த வருடமும் சிறப்பாக அமையுமாறு வாழ்த்துவோம்.

6 comments:

Suresh said...

நல்லா எழுதுறிங்க நண்பா நல்ல பகிர்தல் இந்த பதிவு :-)

Unknown said...

உங்கள் ஆலோசனையில் இதில் பல படங்களை பார்த்துள்ளேன். உலக சினிமா அரங்கில் உங்கள் பதிவை பார்த்து தான் நானும் எனது நண்பர்களும் தரவிரக்கமே போடுவோம். தொடர்ந்து எழுதுங்கள் உலக சினிமா பற்றி. அண்ணன் ஜே.கே.ஆர் நாமத்தை அதுக்காக விட்டுவிட வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Prasanna Rajan said...

மிக்க நன்றி சுரேஷ் மற்றும் ப்ரகாஷ்.

Prasanna Rajan said...

@ ப்ரகாஷ்
ஜே.கே.ஆர் பத்தி ந்யூஸ் ஒன்னும் சிக்க மாட்டேங்குது ப்ரகாஷ். தலை ரெம்ப சைலண்டா, பார்லிமெண்ட் போய்ட்டு வர்றாரா, அதனால நமக்கு ஒன்னும் எழுத மேட்டர் கிடைக்க மாட்டேங்குது.

mathileo said...

clint eastwood ன் படஙகள் என்றால் , அந்தக்காலத்தில் உடனே பார்த்துவிடுவேன்
ஒன்று, அவரின் படன்களில் முக்கியமானது ALCATRAZ. அதை குறிப்பிட மறந்து விட்டீர்களே!

Prasanna Rajan said...

Sorry Sir. I will include it next time, when I write about Clint Eastwood...

Share